dinamalar telegram
Advertisement

கிளப்புறாங்கய்யா... உலகம்

Share
மழலையின் பக்தி பாடல்

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்கும்படியாக இருக்கும். பெண் குழந்தை ஒன்று, 'அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே' என்ற ஸ்லோகத்தை தனது மழலை குரலால் மிகவும் அழகாக பாடுகிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் லைக்ஸ்களை தெறிக்க விட்டதோடு, பாராட்டு மழையும் பொழிந்து வருகின்றனர்.

காஸ்ட்லி கார் 'டமார்'

இளம்பெண் ஒருவர் தனது காஸ்ட்லி காரின் மீது ஏறி ஜிம்னாஸ்டிக் செய்ய முடிவெடுக்கிறார். தொடர்ந்து, காரின் மேற்கூரையின் மீது ஏறி நின்ற அவர் அப்படியே பின்பக்கமாக, 'பல்டி' அடித்து தரையில் நின்று காட்ட முயன்றார். எதிர்பாராதவிதமாக 'பல்டி' அடிக்கும்போது கால் தவறியதால், தரையில் குதிக்காமல் பின் பக்க கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு காருக்குள் விழுந்து விடுகிறார். அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேக்கை பார்த்து திக்... திக்...

வயதான தம்பதிகள் இருவருக்கு திருமண நாள் கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் 'கேக்' வெட்டி கொண்டாட வேண்டும் என, குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அதன்படி, தம்பதிகள் முன், அழகான கேக் வைக்கப்பட்டது. அதை இருவரும் வெட்ட முயன்றனர், அப்போது கேக் மீது வைக்கப்பட்டிருந்த அலங்கார மெழுகுவர்த்தி, திடீரென விரிந்து அப்படியே வட்டமாக சுழன்றது. இதைப் பார்த்து தீ பற்றி விட்டதோ என நினைத்து மூதாட்டி கத்தி கூச்சலிடுகிறார். அது அழகுக்காக வைக்கப்பட்டது என்று கூறியபின்தான், சிரிக்க துவங்குகிறார். மொபைல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பயமுறுத்திய நண்பர்

இளைஞர் ஒருவர் இரும்பு கம்பிகளுக்கு, 'வெல்டிங்' வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்றிருந்த நண்பர் கையில் இருந்த இரும்பு சம்மட்டியை தரையில் ஓங்கி, டமார் என அடிக்கிறார். இதனால், அதிர்ந்து போன இளைஞரோ ஏதோ வெடித்து விட்டதோ என நினைத்து தாவி குதித்து ஓடுகிறார். பின்னர், இதெல்லாம் நண்பரின் செயல் என தெரிந்ததும் அவரை அடிக்கத் துரத்துகிறார். மொபைல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement