dinamalar telegram
Advertisement

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

Share
வெலிங்டன்: நியூசிலாந்தில் நடந்த எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கவுரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் எம்.பி., யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதனன்று அந்நாட்டு பார்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 33 வயது நிரம்பிய சர்மா நாவ்டானில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.அவர் தனது முகநூல் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப்பருவத்திலிருந்து கற்று வருகிறேன். சமஸ்கிருதம் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிலிருந்து தான் எல்லா இந்திய மொழிகளும் தோன்றின' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நடந்த பதவிப் பிரமான நிகழ்ச்சியின் போது சமஸ்கிருத மொழியை பயன்படுத்திய இரண்டாவது நபர் கவுரவ் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (75)

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  படையெடுத்து வந்து வாளாலும் தீயாலும் வலுக்கட்டாயமாக நம் அடிப்படை வாழ்க்கை முறைகளை வேரோடு அழிக்க முற்பட்ட அந்நியர்களின் மொழியை ஏற்றுக்கொள்வார்களாம் ஆனால் சமஸ்கிருதத்தை இழிவு செய்வார்களாம். என்ன மடமை இது தமிழும் சமஸ்கிருதமும் பாரதத்தின் கண்கள். இதில் உயர்வு தாழ்வு கிடையாது. எதையுமே ஆழமாக ஆய்வு செய்யும் திறனோ அறிவோ இல்லாதவர்கள் தான் ஈரோட்டு சித்தாந்த தாக்கத்தில் இந்த மாதிரி பிதற்றிக் கொண்டு திரிவார்கள். உண்மை என்னவென்றால் எந்த மொழியையுமே கற்கும் ஆற்றலோ ஆர்வமோ இல்லாத கூட்டம் இந்த கருஞ்சட்டை கூட்டம்

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  தனது வேர்களை மறக்காத இந்த இந்தியருக்கு பாராட்டுக்கள் என்ன.. கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு விரலிடுக்கு வழியாக உலகத்தை பார்த்துக்கொண்டு தமிலர்கள் ஏதோ ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த இனம் என்கிற கற்பனையை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு வரி தமிலில் எழுதவோ படிக்கவோ தெரியாதவர்களுக்கு இதை புரிந்து கொள்ள முடியாது இந்த டாக்டர் தமிலில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதத்துக்கு உட்காராமல் இருந்தால் சரி

 • COW URINE SANGI - tamilnadu,இந்தியா

  சம்ஸ்கிருத கல்வெட்டு மூவாயிரத்து ஐநூறு வருடத்திற்கு முன் உள்ளதை காட்ட முடியுமா ,

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

   அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் மொழிப் பற்றிற்க்கு மரியாதைச் செய்வோம். சம்ஸ்கிருத மொழி வட இந்தியாவில் கி மு 500. -ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மொழி அன்று வழக்கிலிருந்த பல் வேறு கூட்டு மொழியாகிய பிராகிருதம் என்ற மொழியில் மொழி அறிஞர் பாணினியால் இலக்கணம் புகுத்தப் பட்டு புதிய மொழியான சமஸ்கிருதம் உருவாக்கப் பட்டது. வரலாற்றில் சமஸ்கிருதம் என்றச் சொல்லுக்கு தூய்மைப்படுத்தப் என்ற இன்னொருச் சொல்லுமுண்டு விளக்கமுமுண்டு.. இந்த உண்மை வரலாற்றை நாம் ஏற்றுக் கொள்வோம். Encyclopedia. Britannica. என்ற அறிவுக களஞ்சிய நூலில் சொல்லப் பட்ட உண்மை.

  • Jay - SFO,யூ.எஸ்.ஏ

   கல்வெட்டினை காட்டினால் நீ ஹிந்து மதத்திற்கு திரும்ப வருவாயா?

  • சத்தியம் - Bangalore,இந்தியா

   சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார். மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே –திருமூலர் மேலும் சித்தர் திருமூலர் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுகு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ். தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்ட முடிவில் நூல் கட்டுரை என்ற பகுதியில் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரண்டு தமிழ் பகுதிகள் உள்ள தமிழகம் என்று இளங்கோ அடிகள் சொல்லி உள்ளார்.செந்தமிழ் என்பது தற்பொழுது உள்ள தமிழ் நாடு,கொடுந்தமிழ் என்பது கொடுந்தமிழ் சேர நாடான தற்பொழுது உள்ள கேரளா.சேர நாடான கேரளாவில் இருந்து தான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் எழுதி உள்ளார். தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார். நன்னூல் தமிழ் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் தன் நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்திலே உலகின் இருள் மறைய சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்புதல் போல் மனிதர்களின் மன இருள் மறைய இறைவன் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை மூவாறு (3×6=18) மொழிகளில் கொடுத்தான்... அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்.தமிழ் இலக்கணங்களுக்கு உரை எழுதி உள்ள உரை ஆசிரியர்கள் பதினெண்(18) மொழி பூமி என்று இந்தியாவை குறிப்பிட்டு உள்ளனர்........ தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளையும் நன்கு அறிந்த பெரும் சித்தராக இருந்த வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் தமிழ் தொல்காப்பிய இலக்கணம், சம்ம்ஸ்க்ருத பாணிணிய இலக்கணம் இவைகளில் நிறைய தவறுகள் உள்ளன என சொல்லி உள்ளார். சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு. தமிழில் கரி என்பது செய் என்ற வினைச் சொல்லைக் குறிக்கும். அதிகரி என்றால் அதிகம் செய் அல்லது அதிகம் ஆக்கு. சுத்திகரி என்றால் சுத்தம் செய் அல்லது சுத்தம் ஆக்கு. வசிகரி என்றால் வசியம் செய் அல்லது வசியம் ஆக்கு சேகரி என்றால் சேர்ப்பு செய் அல்லது சேர்ப்பு ஆக்கு கரி என்ற இந்த வினைச் சொல்லின் பெயர்ச்சொல் கரணம் அல்லது கரித்தல்.கரித்தல் என்றால் செய்தல்.கரிதம் என்றால் செய்யப்பட்டது.எனவே செம்கரிதம் என்பது நன்கு செய்யப்பட்டது. சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் என்பதன் உருத்திரிபு என்றும் கூட சொல்லலாம்.காரணம் சன் அல்லது சல் என்ற ஒரு பகுதி தமிழில் மற்றும் மலையாளத்தில் நல்ல என்பதை குறிக்கும் ஒரு பகுதி. இந்த பகுதிச்சொல்(prefix) சம்ஸ்க்ருததில் சத் என்ற உபசர்கமாக அதாவது பகுதியாக ஆகி உள்ளது. சத் என்ற பகுதிக்கு உண்மை,தூய்மை,நல்ல என்று சம்ஸ்க்ருதம் பொருள் சொல்லுகிறது. தமிழில் சன்மார்க்கம்,சன்குரு என்பன போன்ற சொல்களுக்கு நல்ல மார்க்கம்,நல்லகுரு என்று தான் பொருள்.சம்ஸ்க்ருதத்திலும் சன்மார்கா என்ற சொல்லுக்கு நல்ல மார்க்கம் என தான் பொருள் சொல்லுகிறது. மலையாளத்தில் நல்ல மனம் என்பதை சன்மனசு என சொல்லும் வழக்கம் உண்டு. நல்ல குணம் என்பதை சல்ஸ்வபாவம் என சொல்லும் வழ்க்கம் உண்டு. எனவே சம்ஸ்க்ருதம் என்பது சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்பதன உருத்திரிபு என சொல்லமுடியும். சத்யம் என்பது சம்ஸ்க்ருதம் என்று சொல்லப்படுகிறது.ஆனால் உண்மை என்பதை குறிக்கும் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் இலக்கணவிதிக்கு உட்பட்ட சிதைந்த தமிழ் சொல். சத்யம் என்பது சத் என்ற சொல்லில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. சத் என்றால் உள்ளது அல்லது இருப்பு என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள் சொல்லப்படுகிறது. சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழில் எழுதப்படும் போது சத்தியம் என்று தான் எழுதப்படுகிறது.காரணம் சத்யம் என்ற சம்ஸ்க்ருத சொல் சத்தியம் என்ற தமிழ் சொல்லின் சிதைந்த வடிவம். சத்தியம் என்ற சொல்லை சத்து+ இயம்= சத்தியம் என்று தான் பிரிக்க முடியும்.சத்து என்றால் தமிழில் உள்ளது என்று ஒரு பொருள் உண்டு.சத்தியம் என்றால் உள்ள தன்மை என்று பொருள்.தமிழில் ஒரு சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிந்தால் உறைப்பாக அது குணத்தை தான் குறிக்கும் என சொல்ல முடியும்.சத்தியம் என்ற சொல் இயம் என்ற விகுதியில்(suffix) முடிவதால் சத்தியம் என்பது குணத்தை குறிக்கும் தூய தமிழ் சொல் என்று உறைப்பாக சொல்ல முடியும். தமிழில் இறந்து போகுவது செத்து போகுதல் என தவறாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சத்து போகுதல் என தான் சொல்லப்பட வேண்டும். செத்து அல்லது செற்று என்ற சொல்லுக்கு செதுக்கு அல்லது கொல் என்று தான் பொருள். சத்து போகுதல் என்றால் இருப்பு போகுதல். மலையாளத்தில் சத்து போயி என்று தான் சொல்லப்படுகிறது.தெலுங்கில் கூட “சச்சி போசி” என்று தான் சொல்லப்படுகிறது. தமிழில் உண்மை என்ற சொல்லுக்கு உள்ள தன்மை என்று தான் பொருள்.உண்மை என்ற சொல் பண்பு குறித்த பகாப்பதம் ஆகும். எனவே உண்மை = சத்தியம். இரண்டு சொல்களும் உள்ள தன்மை அல்லது இருப்பு தன்மையை தான் குறிக்கின்றன. தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் இவற்றுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமை உள்ளது.

  • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

   சிலர் இல்லாமல் இருப்பதே சனாதன தர்மத்துக்கு நல்லது ..

  • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

   சத்தியம் பெங்களூரு அளித்துள்ள விளக்கம் அருமை

 • Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்

  சமஸ்கிருதம் 40000 ஆண்டுகள் பழமையானது என்பதற்கு என்ன ஆதாரம்? சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளை உருவாக்கியது என்பதற்கு என்ன ஆதாரம்??

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இவர் வீட்டிலாவது தொலைந்து போன சமஸ்கிருதம் பேசுவார்களா? ஆராய்ச்சிகள் இன்றைய நிலை என்ன என்பதை புரிந்து கொண்டாலும், திரும்ப, திரும்ப ஒன்றை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்ற கொள்கை உள்ளவர் என்பது புரிகின்றது.

  • Anand - chennai,இந்தியா

   உயிருக்கு பயந்து அந்நியர்களுக்கு அடிமையான ஒரு மூர்க்கம், சமஸ்கிருதத்தை பற்றி ஓரு மண்ணும் புரியாமல் ஊளையிடுவது, சூரியனை பார்த்து.......... போல.

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

   இந்த நாட்டை கொள்ளை அடிக்க வந்த அரேபிய மொழியை உறுதய் பேசுவதை விட தொலைந்து போன சமஸ்க்ருதம் பேசுவது காட்டுமிராண்டித்தனம் குண்டு வைப்பதில் இருந்து பாதுகாக்கும்

Advertisement