dinamalar telegram
Advertisement

பாலியல் குற்றங்களுக்கு துாக்கு: பாக்., ஒப்புதல்

Share
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கு, மருந்து வாயிலாக ஆண்மையை அகற்றவும், துாக்கு தண்டனை விதிக்கவும், அவசர சட்டம் இயற்ற, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கடுமையான தண்டனை வழங்க, அந்நாட்டு அரசு முடிவு செய்தது.இதன்படி, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு எதிராக, இரண்டு அவசர சட்டங்களை இயற்ற முடிவு செய்யப்பட்டது.


இதன்படி, பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களுக்கு மருந்து வாயிலாக, ஆண்மையை அகற்றவும், அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கவும், அவசர சட்டம் இயற்ற, பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ''இன்னும் சில தினங்களில், இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வரும்' என, பாக்., மனித உரிமை அமைச்சர் ஷிரீன் மஸாரி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement