நியூசிலாந்து எம்.பி., கவுரவ் சர்மா சமஸ்கிருதத்தில் பதவி ஏற்பு
ஹாமில்டன்:நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, டாக்டர் கவுரவ் சர்மா, சமஸ்கிருத மொழியில் நேற்று பதவி ஏற்றார்.
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான, நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் வசிப்பவர், டாக்டர் கவுரவ் சர்மா, 33. நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரைச் சேர்ந்த இவர், 24 ஆண்டுகளுக்கு முன், பெற்றோருடன் நியூசிலாந்து சென்றார்.அங்கு படித்து, டாக்டர் பட்டம் பெற்ற கவுரவ் சர்மா, அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
ஹாமில்டன் நகரில், டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவர், சமீபத்தில் நடந்த நியூசிலாந்து பார்லிமென்ட் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளர் கட்சி சார்பில், ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார்.தேசிய கட்சி வேட்பாளர் டிம் மசிண்டோவை விட, 4,425 ஓட்டுகள் அதிகம் பெற்று, கவுரவ் சர்மா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், எம்.பி.,யாக கவுரவ் சர்மா, நேற்று பதவி ஏற்றார். அப்போது, நியூசிலாந்து நாட்டின், உள்ளூர் மொழியான மவோரியில் முதலில் பதவி ஏற்றார். பின், சமஸ்கிருத மொழியிலும், பதவி ஏற்றுக் கொண்டார். 'ஹிந்தியில் பதவி ஏற்காமல், சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றது ஏன்' என, செய்தியாளர்கள் கேட்டதற்கு, கவுரவ் சர்மா கூறியதாவது:
அது பற்றி நான் உண்மையிலேயே சிந்திக்கவில்லை. என் முதல் மொழியான பஞ்சாபியில் ஏன் பதவி ஏற்கவில்லை என்றும் கேள்வி எழலாம்.அனைவரையும் திருப்தி படுத்துவது கடினம். சமஸ்கிருதம் என்பது, அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவானது. அத்தனை மொழிகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, சமஸ்கிருதத்தில் பதவி ஏற்றேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!