தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்!
'கஜா'வுக்கு பின் 'நிவர்':
* 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.
* 2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.
* 2011 டிச.,: 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின
* 2012 அக்., 31: 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது
* 2016 டிச., 12: 'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள்சேதமடைந்தன
* 2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது
* 2018 நவ., 18: 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன
* 2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
தமிழகத்தை எத்துணையோ புயல்கள் வந்து பாதித்து சென்றிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு புயல் DMK பல ஆண்டுகளாக தமிழக மக்களை அடித்து, துன்புறுத்தி வருகிறது. தமிழக எல்லையை என்று கடக்கும் என்று தெரியவில்லை. இந்த DMK புயல் என்று தமிழகத்தை விட்டு செல்லும் என்று வானிலை ஆய்வு மையமும் கணிக்க முடியவில்லை.
நமக்கு புரிஞ்சதெல்லாம் வைகைப்புயல்தான்.
கட்டுமரம் காலடியில் சரணடைந்த வைகோ வைகை ஆகிய இரண்டு புயல்கள் பற்றி குறிப்பிடாதது வருத்தம்.
1994 க்கு முன்னாடி புயலே அடிக்கலியாக்கும்?
தில்லானா மோகனாம்பாள் பட வசனம் நாகபட்டினத்துல, என்ன புயல் வருதாக்கும், அதுதான் வருசாவருசம் வருதே கழுத அதுக்கென்ன என நாகேசு கூறுவார், அப்படியானால் அக்காலங்களில் வருடாவருடம் சகஜமான நிகழ்வுகளில் ஒன்று, அக்கால மன்னர் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என கேட்பர் என இலக்கியங்கள் உண்டு. இப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்தால் ரோடுகளில் போட்டுதான் ஓட்ட முடியும், வீட்டுக்கு ஒரு போட் திட்டம் தேவைப்படும், மக்கள் தொகைப் பெருக்கமும் மக்கள் நொருக்கமும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் தான் முக்கியகாரணம்