dinamalar telegram
Advertisement

லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க 0 கட்டாயம்

Share
புதுடில்லி: ஜன., 1ம் தேதியிலிருந்து லேண்ட்லைனில் இருந்து, மொபைல் போன்களுக்கு அழைக்க, பூஜ்யம் (0) கட்டாயம் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: லேண்ட்லைனிலிருந்து மொபைல்போனுக்கு அழைக்கும்போது, மொபைல் எண்ணுக்கு முன்பாக, பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என கடந்த மே 29ம் தேதி டிராய் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை ஏற்று, வரும் ஜன.,1ம் தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
இப்புதிய முறையை செயல்படுத்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஜன.,1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பின் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    என்ன மாற்றம் வந்தாலும் நமது BSNL, MTNL இரண்டும் மாறவே மாறாது....எல்லாம் தனியார் மயம் செய்து விட்டால் சரியாகிவிடும்

  • R S BALA - Tiruvallur,இந்தியா

    அதனால என்ன இப்போ ஒரு ஜீரோ தான போட்டுட்டா போச்சு ...

  • KALIHT LURA - kovilnagaram,இந்தியா

    சில ஆண்டுகளுக்கு முன் வரை அமலில் இருந்த நடைமுறைதான் இது.

Advertisement