காங்., மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்
காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான அகமது படேல்(71), கடந்த அக்.,1ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனாவிலிருந்து அவர் முழுவதும் மீண்டு வராத நிலையில், கடந்த வாரம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அகமது படேல் காலமானதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் பைஷல் படேல் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது தந்தை அகமது படேல், இன்று(நவ.,25) அதிகாலை 3.30 மணிக்கு காலமானார். உடல் நலக்குறைவால் அவரது உள்ளுறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (58)
மனிதன் இறப்பில்கூடவா நையாண்டி, இதுவா நமது கலாசாரம்
நரகாசுரன் இறந்ததைக் கொண்டாட என்ன அவசியம்?
RIP
அது என்ன அஹமது படேல் ,ஒண்ணு அஹமதுனு பேர வை ,இல்லைனா படேல்னு பேர வை. ஓ இதுதானா மத சார்பற்ற தன்மையோ?
குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு படேல் என்பது பெயருடன் சேர்ந்து வரும் என்று நினைக்கிறேன். சிமான் பாய் படேல், கேஷுபாய் படேல், ஹர்திக் படேல் ....இப்படி. இவர் பெயரும் அப்ப்டியோ ? தெரிந்தவர்கள் கூறலாம்.
Patel is an Indian surname, predominantly found in the state of Gujarat representing the community of land-owning farmers and later (with the British East India Company) businessmen, agriculturalists and merchants. Traditionally the surname is a status name
கேஷ்மீரில் முகம்மது ஷபி பண்டிட் போன்ற பெயர்கள் சர்வ சாதாரணம் .. இக்பால் போன்ற பெயர்கள் பஞ்சாபியில் சகஜம் ..இப்ராஹிம் ..ஆப்ரஹாம் ...டேவிட் ..தாவுத் ..மேரி ..மரியம் ..ஆமென் ..ஆமின் ...எல்லாம் சகஜம் ..
இப்படி ஒவ்வொன்ன போச்சின்னா அப்போ மிஞ்சுறது வெறும் பப்புவும் அன்டொனியோ மைனொவும் பியங்காவும் தான்
காங்கிரஸ் முக்த் பாரத் இனி பாஜக-வுக்கு சாத்தியம்தான் ...........