நிவர் புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்
வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், சென்னை அருகே இன்று(நவ.,25) கரையை கடக்க உள்ளது. புயலில் நகர்வு காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை துவங்கியது. நேற்று அதிகாலை முதல், பகல் முழுதும், மழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை மற்றும் புறநகரில், அண்ணாசாலை, 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- நமது நிருபர் -


கடல் சீற்றம்:
நேற்று முன்தினம், எண்ணுார், திருவொற்றியூர் கடற்கரைகளில், படகுகள் பத்திரமாக பாறைகளில் கட்டி வைக்கும் பணியை, மீனவர்கள் மேற்கொண்டனர். தவிர, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், வார்ப்பு பகுதிகளில், விசைப்படகுகள் பத்திரப்படுத்தப்பட்டன. நேற்று அதிகாலை, புயல் காரணமாக, காசிமேடு, எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.
- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் விளைவுகள் மிகவும் மோசமாக என்று தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அரசும் தங்களால் முடிந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றும் செயலில் உள்ளது. மக்களும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அனாவசியமாக வெளியில் சுற்றுவது, வெளியில் வேடிக்கை பார்க்க செல்வது போன்ற செயல்களில் இறங்காமல்,பத்திரமாக வீட்டில் இருப்பது சால சிறந்தது. விபரீதம் ஏட்பட்டபின் வருந்தியோ, அரசை குறை கூறியோ எந்த பயனும் இல்லை.