dinamalar telegram
Advertisement

அலர்ட்: நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்டம் முழுதும்...பாதுகாப்பு மையங்களில் மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு

Share
Tamil News
வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், நாளை (25ம் தேதி) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனால், நாளை கடலுார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடியுடன் மிக கன மழை பெய்யும், கடலில் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும், மணிக்கு 100 கி.மீ., வேகம் வரையில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கைபுயல் காரணமாக திடீர் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்து, கடலுார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரித்து 3 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.மேலும், மாவட்டத்தில் கடற்கரையோரம் மற்றும் ஆற்றங்கரையோரம் நிறுத்தி வைத்துள்ள படகுகளை டிராக்டர்கள் மூலம் கரைக்கு இழுத்து வந்து பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர்.காவல்துறை, தீயணைப்பு, பொதுப்பணி, மின்துறை, வருவாய் உட்பட அனைத்து துறை அதிகாரிகளை உஷார்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கும் பொதுமக்கள் தங்குவதற்கு இடங்கள், உணவு, நிவாரண பணிகள், மீட்பு பணி மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது.இது வரை, கடலுார், சிதம்பரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 120 குடும்பங்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

கடலுார், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதி கடற்கரை கிராமங்களில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்தார்.கடலுார் அருகே ராசாப்பேட்டையில் ஆய்வு செய்த பின் அவர் கூறுகையில்,' மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படுகிறது. மின்சார பாதிப்பை கருத்தில் கொண்டு, 164 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே மழை வெள்ளதால் பாதித்த 278 இடங்களும், அதிக பாதிப்ைப ஏற்படுத்தும் இடங்களை கண்டறிந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் குழுவும் இதனை கருத்தில் கொண்டு தான் செயல்பட உள்ளனர். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்றார்.--------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement