கோவை:கோவை, செல்வபுரத்தில், ஆலமரம் பஸ் ஸ்டாப் பகுதியில், ரோட்டோர ஆக்கிரமிப்பை அகற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை அளவீடு செய்து, மஞ்சள் நிறத்தில் குறியீடு மற்றும் கற்கள் நட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பை இன்னும் அகற்றாமல் இருப்பதால், நான்கு வழிச்சாலையாக்கும் பணி, பாதியில் நிற்கிறது.
கோவை, வைசியாள் வீதியில் இருந்து தெலுங்குபாளையம் பிரிவு வரை, ரூ.6 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்; 14 மீட்டர் அகலத்துக்கு ரோடு விசாலமாகும்; மையத்தடுப்பு, தெருவிளக்கு அமைக்கப்படும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்தாண்டு நவ., மாதம் ஆக்கிரமிப்பு அகற்றியபோது, சில கடைகள் மற்றும் வீடுகள், ரோட்டை ஆக்கிரமித்து கட்டியிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
செல்வசிந்தாமணி குளக்கரையில் இருந்து அரச மரம் பஸ் ஸ்டாப் வரை, ரோடு அகலப்படுத்த, அளவீடு செய்து, மஞ்சள் நிற குறியீடு மற்றும் எல்லை கற்களும் நடப்பட்டுள்ளன. ஓராண்டு உருண்டோடியும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்க்கிறது நெடுஞ்சாலைத்துறை.இதனிடையே, ரோட்டின் எல்லை தெரியாமல் மாநகராட்சி, பல லட்சம் ரூபாய் செலவழித்து, மழை நீர் வடிகால் கட்டியுள்ளது. ரோட்டை அகலப்படுத்தும்போது, அவற்றை இடித்து விட்டு, மீண்டும் புதிதாக கட்ட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
யாருங்க பொறுப்பு?
இப்படி வீணாக லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்ததற்கு, யார் பொறுப்பு? அளவீடு மட்டும் செய்துவிட்டு, குளுகுளு அறைக்குள் முடங்கிக் கிடக்கும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொறுப்பா?ரோட்டின் எல்லை எதுவரை இருக்கிறது என, ஆவணங்களை சரிபார்க்காமல், ஆக்கிரமிப்புகளை இடிக்காமல், தன் இஷ்டத்துக்கு மழை நீர் வடிகால் கட்டிய, மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பா?இனியும் முடங்கிக்கிடக்காமல், ஆலமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, ரோட்டை அகலப்படுத்தி, மையத்தடுப்பு மற்றும் தெருவிளக்கு அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!