அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக, சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் கிளைச் செயலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயராமன், 'எல்லாரும், கட்சி வேலையை பாருங்க... சனி, ஞாயிறு கிழமைகளில், ஒவ்வொரு வார்டு கிளைச் செயலர் வீட்டுக்கும் நான் வருவேன்...' என்றார்.அங்கிருந்த, கிளைச் செயலர் ஒருவர், 'நம்ம வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்டால், ஒருத்தரும் வர மாட்டாங்க... தேர்தல் நெருங்கவும், அழையா விருந்தாளியாக கிளம்பிட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
இவர் மட்டுமா வருவார்? படை பட்டாளம் எல்லாம் வரும் 'உபசாரம்' எல்லாம் பலமாகச் செய்ய நிர்வாகிகள் தலை தான் மொட்டையடிக்கப்படும்