dinamalar telegram
Advertisement

குட்கா கடத்திய இருவர் கைது

Share
சென்னை : பெரியமேடு பகுதியில், ஆட்டோவில் குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை, பெரியமேடு பகுதியில், ஆட்டோ ஒன்றில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த ஆட்டோ குறித்து விசாரித்தனர். அந்த ஆட்டோ, நேற்று, பெரியமேடு நேவல் ஹாஸ்பிட்டல் சாலை வழியாக செல்வது தெரியவந்தது. ஆட்டோவை போலீசார் மடக்கினர்.அதில், அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் அலி, 33, சையது முகமது, 40 ஆகியோர் இருந்தனர்.இவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில், 220 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன. இருவரையும் கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement