dinamalar telegram
Advertisement

மகன் மரணத்தால் சோகம் தாய் துாக்கிட்டு தற்கொலை

Share
பழவந்தாங்கல் : உடல் நலக்குறைவால் மகன் இறந்த தகவலை கேட்டு தாங்க முடியாமல், தாய் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.


நங்கநல்லுார், பி.வி.நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர், ரமணிபாய், 72; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மகள் பிரியா, 34, மகன் ராம்பிரபு, 32. பிரியாவுக்கு திருமணமாகி விட்டது.அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராம்பிரபு, பெருங்களத்துாரில் உள்ள, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.அவருக்கு இதயக்கோளாறு பிரச்னை இருந்தது. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.


மகன் இறந்த தகவலறிந்து கதறிய ரமணிபாய், நேற்று அதிகாலை, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement