dinamalar telegram
Advertisement

குளிர்கால தொடர் நடக்குமா? லோக்சபா சபாநாயகர் தகவல்

Share
புதுடில்லி : ''பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. இதற்கான தேதிகளை அரசு முடிவு செய்யும்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

டில்லியில் நேற்று நிருபர்களிடம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரையும், பாதுகாப்புடன் நடத்துவது பற்றி, நிலைக்குழுக்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. எனினும், கூட்டத்தொடருக்கான தேதிகளை, மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, கூட்டத்தொடருக்கான தேதியை, அரசு முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நடந்தே ஆகவேண்டும். எழுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நிறைய மசோதாக்கள் தேங்கி கிடக்கின்றன. அதில் முக்கியமானது கோவில் சொத்துக்களை மாநிலம் நிர்வகிப்பது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு அறநிலையத்துறை காணாமல் போய்விடும்.

  • anbazhagan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    வெரி good

Advertisement