dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!

Share
Tamil News
சென்னை : அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ படிப்பு செலவை, அரசு ஏற்பதாகவும், அதற்காக, தமிழக மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி ஏற்படுத்தவும், முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். இதன் வாயிலாக, அம்மாணவர்கள், கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று, அவர் தெரிவித்துள்ளர். அதேபோல, ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு செலவுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.


மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால், மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலைமை ஏற்பட்டது. கடந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் படித்த, ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

எட்டாக்கனி



தமிழகத்தில், மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 41 சதவீதம் பேர், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு, மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறியது.அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவவை நனவாக்கும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, தமிழக அரசு இயற்றி, இந்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தியது. அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், 313 எம்.பி.பி.எஸ்., இடங்களிலும், 92 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களையும் பெற்றுள்ளனர்.


இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள, அரசு பள்ளி மாணவர்களால், ஆண்டுக்கு, 3 - 4 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், மருத்துவ படிப்பை கைவிடும் நிலைக்கு, ஏழை மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அதனால், 'அரசு பள்ளி மாணவரின், மருத்துவ கல்வி கட்டணத்தை, அரசே ஏற்க வேண்டும்' என, உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தியது.இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ படிப்பு செலவை ஏற்பதற்காகவே, தமிழக மருத்துவ சேவை கழகத்தில் சுழல் நிதி ஏற்படுத்த, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை:அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அரசு இயற்றியுள்ளது. அதன்படி, நடப்பாண்டில், 313 எம்.பி.பி.எஸ்., 'சீட்'களும், 92 பல் மருத்துவ இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார நிதி



அரசு பள்ளி மாணவர்களின் ஏழ்மை மற்றும் பொருளாதார சூழ்நிலை கருதி, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, 18ம் தேதி அறிவித்தேன்.கவுன்சிலிங்கில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்கள், கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, இதை அறிவித்தேன்.இதை செயல்படுத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, உதவித்தொகை வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக செலுத்தும் வகையில், தமிழக மருத்துவ சேவை கழகத்தில், சுழல் நிதி உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.

அரசியல் நாடகம்



இந்த நிதியில் இருந்து, மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்களை, அரசே, கல்லுாரி நிர்வாகங்களுக்கு செலுத்தும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், தி.மு.க., உதவுவதாக கூறியிருப்பது, அரசியல் நாடகம் என்பதை, மக்கள் நன்கு அறிவர்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில், ஆளும் அ.தி.மு.க., அரசு, பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, கல்வி கட்டணத்தையும், அரசு ஏற்கும் என, அறிவித்துள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், இது ஆளும் கட்சிக்கு சாதகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, தி.மு.க.,வும், தற்போது, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கனவு நிறைவேறும்



தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் அமையவிருக்கிற, தி.மு.க., ஆட்சியில், 'நீட்' தேர்வை, முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும்.இந்த கல்வியாண்டில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் இடம் பெற்றுள்ள, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்போம்.அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கிராமப்புற ஏழை பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த, அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவும் நிச்சயமாக நிறைவேறும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10 + 17)

  • vbs manian - hyderabad,இந்தியா

    எப்படியோ அரசு பள்ளி மாணவர் காட்டில் மழை.

  • Gururaj - Coimbatore,இந்தியா

    தமிழக அரசே 1. Neet தேர்வு முடிட்ந்த பிறகு 7.5% இட ஒத்திக்கீட்டை முடிவு செய்தது படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு நீங்கள் செய்த பச்சை துரோகம். அதாவது நீட்டில் 500 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் 148 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே அரசு என்ன நிலமையில் உள்ளது என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புரிந்துள்ளனர். வரும் காலங்களில் அதை உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்

    • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

      திருடன் திருட்டு முழி முழிக்காமல் ராஜ முழியா முழிப்பான்?

    • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

      இதை நீ முன்னரே செய்து இருக்கலாமே

  • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

    குடும்ப ஆட்சிக்கு, கட்சிக்கு, குடும்பத்திற்கு இறுதி ஊர்வலத்தை அமித்ஷா ஒருவரால் தான் நடத்த முடியும். இந்த முறை அடிப்பது ஊழல் குடும்ப கட்சியின் சவப்பெட்டியில் இறுதி ஆணியாக இருக்க வேண்டும்.

  • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

    இனிமேல் தான் எடப்படியார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்னும் ஊழல் குடும்பத்திற்கு ஆதரவாக அணைத்து பத்திரிகை, ஊடகங்களும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டது, அரசின் சாதனைகள் மக்களிடம் திரித்து கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. ஊழல் குடும்பம் எந்த நேரத்திலும் கலவரத்தை தூண்டி விட, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்திட திட்டம் போட்டு வைத்துள்ளது, உங்கள் கையை வைத்தே உங்கள் கண்ணை குருடாக்க தருணம் பார்த்து கொண்டிருக்கிறது, அதற்க்கு உதாரணங்கள் தான் காவல்துறை லாக்கப் மரணங்கள். தேர்தல் நெருங்க இந்த மாபாதக பயங்கவாத ஊழல் குடும்ப கும்பல் வெறிகொண்டு இன்னும் பல கொடூரங்களை அரேங்கேற்றுவார்கள். அறுபது வருடமாக இந்த திருடன் ஊழல் குடும்ப ஆராஜகங்களை பார்த்து வருகிறேன்.

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பார்களே அதனைப்போலத்தான் ஸ்டாலினுக்கு இந்த வியாதி இருக்கும்போல. அரசு எதனை செய்தாலும் தான் தான் செய்ததாக விளம்பரம் செய்துவருவது அவருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டார் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டனர். அரியர் தேர்ச்சி பற்றி அரசு அறிவித்ததும் உடனே ஸ்டாலின் பணம் கட்டியவர்களுக்கும் அந்த சலுகையை கொடுங்கள் என்பதும்..அதனை யாருமே ஏற்க மாட்டார்கள் என்பதும்..அவருக்கு உள்ள அரசியல் அறிவை என்னென்பது? அடுத்து 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று முதல்வர் அறிவித்ததும்..தொடர்ந்து அதனை உடனே செயல்படுத்துங்கள் என்று போராட்டம் நடத்துவதாக அறிவித்ததும்..கிட்டத்தட்ட ஸ்டாலினை கூடவே இருக்கும் கூட்டணி தலைவர்களே கூட அவரை கேலிப்பொருளாகவே பார்த்தார்கள். இப்போதுகூட பாருங்கள்..அரசு மாணவர்களுக்கு மருத்துவ கட்டணங்களை அரசே செலுத்தும் என்று சொன்னதுமே இவரும் அதே போல அறிவிக்கின்றார். தேர்தலில் இவரது பேச்சை கேட்கவும் சிரித்து மகிழவும்..மீம்ஸ் கிரியேட்டர்களை திணறவைக்கும் அளவுக்கு இவரது பேச்சு உளறலில் உச்சத்தை தொடும் என்பதும் பார்க்கத்தான் போகிறோம். பதவி வெறியில் ஸ்டாலினின் செயல்கள் எல்லாமே கோமாளித்தனமே உயர்ந்து நிற்கின்றது..ஐயோ பாவம்..

Home அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்: முதல்வர் (17)

  • siriyaar - avinashi,இந்தியா

    நீட் தேர்வுக்கு முன் 100 அரசு பள்ளி மாணவர்கள் கூட மருத்து இடம் வாங்கவில்லை, இப்ப 400 பேருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திமுக மருத்துவ ஊழல் ஆண்டுக்கு 5000 கோடி நின்று போச்சு

  • dina - chennai,இந்தியா

    மாணவர்கள் இந்த சுடலையின் உதவி தொகையை ஏற்றுக்கொண்டால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவரானது திமுக போட்ட பிட்சை - ஆர்.எஸ்.பாரதி என்று கூறியிருப்பார்.

  • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

    சூசைய MBBS என்னன்னு கேட்டதுக்கு அது கமல் நடிச்ச படம்னு சொல்றானேப்பா

  • ஆரூர் ரங் -

    முதலில் தனியார்கள் மருத்துவக் கல்லூரி துவக்குவதை திமுக கடுமையாக எதிர்த்தது. ராமசந்திரா ம கல்லூரியை அரசுடைமையாக்கியது. பின்னர் அது பெரிய தங்கச்சுரங்கம் என ஞானோதயம் வந்து இப்போ முக்கால்வாசிக்கு மேல் தனியார் மரு கல்லூரிகள் திமுக பினாமிகளுடையது. கொள்கைப்பிடிப்புள்ள வீரராக இருந்தால் திமுக ஆட்களின் மருத்துவக் கல்லூரிகளை அரசிடம் ஒப்படைக்கட்டும். அல்லது எல்லா ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் கல்வி அளிக்கட்டும் பார்ப்போம்

  • thulakol - coimbatore,இந்தியா

    அணைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளை அரசுடமை ஆக்கி விடுங்கள்

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    மாணவர்கள் இந்த சுடலையின் உதவி தொகையை ஏற்றுக்கொண்டால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவரானது திமுக போட்ட பிட்சை - ஆர்.எஸ்.பாரதி என்று கூறியிருப்பார். நல்ல வேலை அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது.

  • ஆப்பு -

    அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் குடுப்பதே முறை.

  • Svs yaadum oore - chennai,இந்தியா

    திமுக ஆட்சிக்கு வந்தால் , நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பொய்யான தகவல் …..இது பற்றி சட்ட மன்றத்தில் என்ன விவாதம் நடந்தது , எதிர் கட்சி தலைவர் என்ன கூறினார் என்று நன்கு படித்து பார்த்து பிறகு கருத்து எழுதுவது நல்லது ….தவறான தகவலை இங்கு பகிர வேண்டாம் …..

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

    எடப்பாடி அறிவிக்க போகிறார் என்று தெரிந்துக்கொண்டு தான் சுடலை கட்டணத்தை திமுகவே ஏற்க்கும் என்றார். வாங்கியே பழக்கப்பட்டவர்கள் கொடுத்து பழக்கம் இல்லை. கொடுக்க முன் வந்தது தேர்தல் முதலீடு. நல்ல வேளை எடப்பாடி அறிவித்தார், இவர்கள் பணத்தில் மாணவர்கள் படித்து டாக்டரானால், அரசு மாணவர்கள் டாக்டரானது திமுக போட்ட பிச்சை என்று கூறியிருப்பார் ஆர்.எஸ்.பாரதி.

  • krish - chennai,இந்தியா

    இவர்களது அதிகார போட்டியில், அரசு கஜானா பலியாடாக ஆகி உள்ளது, வருத்தத்திற்கு உரிய விஷயம். பொருளாதாரத்தில் தளர்ச்சியான, சிக்கலில் உள்ள, மருத்துவ கல்வி தொடர முடியாமல் தவிக்கும் மாணாக்கர்களுக்கு , அரசே முன்வந்து, வட்டி இல்லா கல்வி கடன் உதவி வழங்கி, பின், அரசு மருத்துவ மனைகளில் வேலையில் அமர்த்தி, அரசின் கல்விக்கடன் உதவியை தீர்க்க முயல்வது, புத்திசாலித்தனம்.

  • ஆரூர் ரங் -

    அரசு அலுவலர்களில் பெரும்பாலானோர் திமுக😡 ஆட்கள். அரசின் கொள்கை முடிவுகளை முன்கூட்டியே திமுகவுக்கு 😎உளவு சொல்லி விடுகின்றனர். அச்செய்திகளை வைத்து சுடலை அசிங்க அரசியல் செய்கிறார். நாகரீகத்தை என்றுமே அவரிடம் எதிர்பார்க்கமுடியாது

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி செம்ம ஃபார்மில் இருக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றியது என்பது அற்புதமான செயல். கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சொல்லி இருக்கவேண்டியதில்லை. அந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை வந்தபின் செலுத்தலாம் என்று அறிவித்திருக்கலாம். மருத்துவ மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் கல்வியை உங்கள் அறிவை, உங்கள் திறமையை உங்களை உருவாக்கிய இந்த தமிழ்நாட்டுக்கு பயன்படுத்துங்கள். அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடாதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தின், தமிழ்நாட்டு மக்களின் சொத்து. உலகளவில் மருத்துவத்துறையில் நம்பர் ஒன் தமிழகம் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வாருங்கள். சாதித்ததுக்காட்டுங்கள்.

    • manickam jayaprakkash - Coimbatore,இந்தியா

      ஐநூறு மார்க் எடுத்தவன் கண்ணீர் விடறான், நூறு மார்க் வாங்கி சீட்டு வாங்கியாச்சு. பாரீட்ச்சை எழுதிய பிறகு ஒதுக்கீடு அநியாயம் . அடுத்த வருடம் கொடுத்திருக்கலாம். புது கல்லூரிகளும் வரவில்லை பாவம் நன்கு படித்தவர்கள்

    • P. S. Ramamurthy - Chennai,இந்தியா

      What Sri Manikam expressed is correct. In fact this is against Supreme Court ruling in one way. If any one go to Court this Quota will be stopped. Why there is no cut of Mark followed. If a student has given a blank answer sheet he might have got a seat. So Tamil Nadu is going to produce Dr. with out quality of education. Good to keep them in Tamil Nadu to reduce the Population. Vazga Tamil Nadu.

  • Anand - chennai,இந்தியா

    இதை எப்படியோ அறிந்த சூசை முந்திக்கொண்டு "இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும்" என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதெல்லாம் ஒரு பொழப்பு.

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    ungalin சாதனையாக 7.5% சாதனையை தங்களால் தான் கிடைத்தது என்று மக்களிடம் பொய்யை கூறி பெருமை அடித்து கொள்வது போல் இதிலும் செய்யலாம் என்று அறிக்கை விட்டு இருப்பார் ....அதுவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்று இருப்பார் ... ஒருபோது திமுக என்ற கட்சி உதவி செய்யாது

Advertisement