dinamalar telegram
Advertisement

கனடாவுக்கு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை 100 ஆண்டுக்கு பின் அரசிடம் ஒப்படைப்பு

Share
டொரன்டோ:இந்தியாவில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலையை, கனடா திரும்ப ஒப்படைத்தது.

வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த, நார்மன் மெக்கன்ஸி என்ற, கலைப் பொருள் சேகரிப்பாளர், 1913ல் இந்தியா வந்தார். கண்காட்சிஉத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கங்கை கரையோரம் ஒரு கோவிலில் இருந்த அன்னபூரணி சிலை, அவரை கவர்ந்தது. அதை எப்படியாவது கனடாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார். அவரது விருப்பத்தை அறிந்த ஒருவர், சிலையை திருடி, மெக்கன்சியிடம் ஒப்படைத்தார்.


இதைஅடுத்து, கனடா திரும்பிய மெக்கன்ஸி, தன் கலை கண்காட்சிக் கூடத்தில், அந்த சிலையை வைத்தார். தற்போது, ரெஜினா பல்கலையைச் சேர்ந்த, மெக்கன்ஸி கலைக் கூடத்தில், அன்னபூரணி சிலை உள்ளது. இந்நிலையில், ஓவியர் திவ்வா மெஹ்ரா என்பவர், தான் அமைக்க உள்ள கண்காட்சிக்காக, மெக்கன்ஸி கலைக் கூடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வாரணாசி அன்னபூரணி சிலையை பார்த்ததும், அதன் பூர்வீகத்தை ஆராய்ந்து உள்ளார். அது இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலை என்பது தெரியவந்தது.


உடனே, ரெஜினா பல்கலையிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்தார். சிலையின் ஆவணங்களை பார்த்ததும், அது கடத்தல் சிலை தான் என, தெரியவந்தது.

காலனி ஆதிக்கம்



இதையடுத்து, ரெஜினா பல்கலை நிர்வாகம், தானே முன்வந்து, அன்னபூரணி சிலையை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. அப்போது, ''காலனி ஆதிக்கத்தின் போது நடந்த தவறை, சரி செய்யும் பொறுப்பு, பல்கலைக்கு உள்ளது,'' என, ரெஜினா பல்கலை துணை வேந்தர், தாமஸ் சேஸ் தெரிவித்தார். விரைவில் இந்த சிலை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement