dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்

Share
Tamil News
சென்னை : ''தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:

தமிழகம், நீர் மேலாண்மையில், சோழர்கள் காலத்தில் இருந்தே சிறந்து விளங்குகிறது. சோழர்கள் காலத்தில், பல்வேறு நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, மக்கள் இயக்கமாக மாற்றினார்.

தற்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ், 6,278 நீர் நிலைகள், 1,433 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் கீழ், 5,186 சிறு பாசன ஏரிகள், 25 ஆயிரத்து, 987 குளங்கள், 805 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில், 160 தடுப்பணைகள், பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி துறை சார்பில், 42 ஆயிரத்து, 635 சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.


காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம்; அத்திக்கடவு - அவிநாசி திட்டம்; மேட்டூர் - சரபங்கா வடிநில நீரேற்று திட்டம்; கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ஆதனுார் - குமாரமங்கலத்தில் கதவணை என, பல்வேறு நீர்வள ஆதார திட்டங்களை, அரசு நிறைவேற்றி வருகிறது.
மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி, சோதனையான தருணத்தில், நாட்டு மக்கள் ஒத்துழைப்போடு, வல்லரசு நாடுகள் பாராட்டுகிற அளவுக்கு ஆட்சி செய்கிறார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க, அல்லும் பகலும் அயராமல் உழைத்து வருகிறார். அவரது கடுமையான முயற்சிக்கு, தமிழகம் எப்போதும் துணை நிற்கும்.


லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். அ.தி.மு.க., 10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது. பல்வேறு திட்டங்களை, நாட்டு மக்களுக்கு தந்துள்ளது. மீண்டும், வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். அ.தி.மு.க., ஆட்சி அமையும்.இவ்வாறு, அவர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது:



கடந்த, 2011ல் இருந்து, அ.தி.மு.க., அரசு அனைத்து துறைகளிலும், ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஜெ., அரசு, கோடிக்கணக்கான தமிழக மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில், நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதனால் தான், தமிழக மக்கள் என்றும், எங்கள் பக்கம்.
அரசின் சாதனைகளை, தமிழக மக்கள் பார்க்கின்றனர்; பாராட்டுகின்றனர். எதிர்கட்சியினரும் பார்க்கின்றனர்; ஆனால், பரிதவிக்கின்றனர். ஜெ., அரசுக்கு தினமும் மக்கள் செல்வாக்கு கூடுகிறதே என, மனம் பதைக்கின்றனர். அதனால், மனம் பொறுக்க முடியாமல், குற்றம் சொல்கின்றனர்.

ஜெ., வளர்த்த சிங்கங்கள் தான், அ.தி.மு.க., தொண்டர்கள். சிங்கத்தின் குகையிலே வந்து, சிறுநரிகள் வாலாட்ட முடியாது. எனவே, தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்று, முத்திரை பதிப்போம். வெற்றிக்கனி பறிப்போம்.இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிய, பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் கடினமாக இந்தியாவை நல்வழிப்படுத்த, ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இனி வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., வெற்றி கூட்டணி தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

அரசு விழாவில் அரசியல்



தமிழக அரசு சார்பில் நடந்த அரசு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும், கூட்டணி தொடரும் என அறிவித்ததும், தி.மு.க., - காங்., கட்சிகள் ஆட்சியிலிருந்த போது, தமிழகத்திற்கு என்ன செய்தன என, அமித்ஷா கேள்வி எழுப்பியதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு விழாவில், அரசியல் பேசலாமா என, எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19 + 25)

  • rajan -

    பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் அண்ணா திமுக ஜெயிக்காது..... பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை மறந்து விடக்கூடாது... 25 தொகுதிகளை பாமகவுக்கு கொடுத்தால் 15 தொகுதிகளை யாவது அவர்கள் கைப்பற்ற வாய்ப்பு உண்டு.. ஆனால் பிஜேபி இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறுவதே பெரிய விஷயம். இனி ஆண்டவன் விட்ட வழி. தமிழகத்தின் தலையெழுத்து எப்படி அமையப் போகிறது என்று கவலையாக உள்ளது. மறுபடியும் திமுக வந்துவிட்டால் அவ்வளவுதான்.

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    வளர்ப்பு மகளை திருமணம் செய்த பெரியார் மண் இது

  • spr - chennai,இந்தியா

    தமிழகத்திற்கு நன்மை செய்வதாகச் சொல்லி பல்லாயிரம் கோடி கொடுத்து அதில் நிச்சயம் பல நூறு கோடிகளாவது அஇஅதிமுக கட்சிக்கு கிடைக்கும் என்ற வகையில், மக்கள் பணத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் கொரோனா உதவிநிதியே எப்படிச் செலவழிக்கப்பட்டது என கணக்கு தரவில்லை மத்திய அரசும் கேட்கவில்லை. மூன்று காசு செலவில்லாமல் வந்த ஆதாயம். இப்போது அரசியல் தொழிலில் ஆதாயம் கிடைக்குமென முன்னூறு கோடி முதலீடு செய்த ஸ்டாலின் தவறு செய்து விட்டோம் என்று வருந்துவார்

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    " உன்னாலே நான் கெட்டுப்போனேன் என்னாலே நீ கெட்டுப்போன " என்று ஏற்கனவே தீம்கா காங்கிரஸ் கொள்ளைக்கூட்டணி பொலம்புனது உண்மைதானே ?

    • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

      என்ன மொழி பற்றுதல்

  • muttam Chinnapathas - Chennai,யூ.எஸ்.ஏ

    தமிழர என்ற இனம் இல்லை என்று எந்த அறிவியல் சொன்னது. உங்களுக்கு அடிமையாகாதான் இருப்பேன் என்று அடம்புடிக்கும் சில தமிழ் இனம் இதை பார்த்தாவது திரிந்தினால் நல்லது

Home அதிமுக - பா.ஜ., கூட்டணி தொடரும்: பழனிசாமி, பன்னீர்செல்வம் அறிவிப்பு (22)

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    பிஜேபி தற்சமயம் தனது பலத்தை தமிழ்நாட்டில் ஏற்றம் கொண்டு வருகிறது. அண்ணாமலை கிராமங்களும் படித்தவர்களும் கவரும் பேச்சு செய்து வருகிறார். திராவிட முன்னேற்ற கழகம் மீது நம்பிக்கையை இழந்த பலர் பிஜேபியை நோக்கி செல்வதை பார்க்கிறோம். பிஜேபி தன நிற்கும் இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. ஓவசிஸ் திமுகவின் முஸ்லீம் ஓட்டுக்களை வாங்க போகிறார். திமுகாவின் கனவு நிறைவேறாது.

  • periasamy - Doha,கத்தார்

    மனித குல விரோத சக்திகளை தமிழக மக்கள் ஒழிக்க காத்துக்கொண்டிருக்கார்கள் சேர்ந்தே அழிய அவர்களே எளிதாக்கிவிட்டார்கள்

  • periasamy - Doha,கத்தார்

    தமிழ்நாட்டில் பிஜேபி கிடையாது இனிமேல் அவர்களின் அடிவருடி அதிமுகவும் வரும் தேர்தலில் ஒழிந்துவிடும்

  • ktkswami - delhi,இந்தியா

    Onda vantha pidaari oor pidaariyai virattiya kadahai thaan

  • அறவோன் - Chennai,இந்தியா

    வச்சு செய்ய மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

  • அறவோன் - Chennai,இந்தியா

    மக்கள் வச்சு செய்ய ஏதுவா தொடரனும்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    பி ஜே பி உடன் கூட்டணி தவிர வேறு வழி கிடையாது.

  • spr - chennai,இந்தியா

    யானைக்கு உணவுக் கவளம் தரும் பொழுது கொஞ்சம் சிதறும் உணவைப் பல்லாயிரக் கணக்கான எறும்புகள் உண்டு வாழும் இப்படிப் பல்லாயிரக் கணக்கான கோடிகளில் திட்டங்கள் அமுல்படுத்தினால், சில பல கோடிகளாவது தொடர்புடைய நட்புக்கு கட்சித் தலைவர்களுக்கு கிடைக்காதா இந்த திட்டங்களில் பல செல்வி அறிவித்த பல திட்டங்களை போல கண்ணுக்கே தெரியாமல் போகும் அவர் அறிவித்த திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டது யார் பலன் பெற்றார் என எவருக்கேனும் தெரியுமா இப்படி பல்லாயிரக்கணக்கான திட்டங்கள் குறித்து ஊடகங்கள் செய்தித்தாள்கள் இவற்றின் செயலாக்கத்தைக் கண்காணித்து எப்பொழுது அவை பலன் தரும், என்ன செலவாயிற்று என்றெல்லாம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் ஆனால் அவர்களுக்கும் ஒரு விலையுண்டே நடக்குமா

  • siriyaar - avinashi,இந்தியா

    அரசு ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே மக்கள் சினிமா கிளைமாக்ஸ் விட அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள் நிஜ வில்லன்கள் அவர்களே. திமுக அவர்களின் .எஜமான்.

  • Kathirvel -

    அதிமுக கட்சிக்கு இழப்பு....

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கின்றார்களென்றால் அது தமிழக மக்களின் வரிப் பணம். அதுவும் கொஞ்சம்தான். அதில் அரசியலை கலக்கவேண்டாம். அவர்கள் சும்மாகொடுக்கவில்லை அமித்ஷா தமிழக வருகையை அடுத்த ஆண்டு நடைப் பெறப் போகும் சட்டசபைத் தேர்தலோடு கண்ணோட்டமிட்டால் இது அரசியல் அணுகுமுறையாகத் தெரிகின்றது. தமிழர்கள் இதை எப்படி அணுகப் போகின்றார்களேன்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழர்களைப் பொறுத்தமட்டில் பாஜக விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வேறுபாடுமில்லை. அவர்கள் ஏன் தமிழகத்தில் வேரூன்ற துடிக்கின்றார்கள் . பாஜகவின் கலாச்சாரமும் நெறிமுறைகளும் மொழியும் வேறு. எல்லாம் முரண்பட்ட நிலைப்பாடுகள். நம் நெறி முறைகள் காலம் காலமாக கொண்டுவர பட்ட தொன்மைவாய்ந்த சைவ நெறி. அதைக் கட்டிக் காப்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை. அதிமுகாவின் பலவீனம் பாஜாகாவின் பலம். உண்மைதானே. இந்தவுண்மையை உணர்ந்துக் கொண்டால் நமக்கு நல்லது.

    • ஆரூர் ரங் - ,

      தொல்காப்பியதில் வருணன் இந்திரன் திருமால் வேலன் வழிபாடு குறிப்பிடப் பட்டுள்ளது. சிவன் பெயரே இல்லை. சும்மா சைவ சைவ ன்னு புலம்பவேண்டாம். அறிவியல்படி தமிழன் என்று ஒரு இனம் கிடையவே இல்லை. அது போலி அரசியல்

    • Anbu Tamilan - kulalumpur,மலேஷியா

      According to you, Tamil people should decide who supports Hinduism only for this election. Compared to DMK alliance [Anti Hindu & Anti indians] BJP is the best. TN lost all good things because of DMK Criminals

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    எடப்பாடி பிஜேபியோடுகூட சேர்ந்து தேர்தலை சந்திப்பது நல்ல யுக்திதான். பிஜேபியின் மக்கள் ஆதரவு தற்சமயம் கூடுகிறது.பிஜேபிக்கு எடப்பாடி 70 சீட்டுகள் கொடுத்தால் குறைந்தது பிஜேபி 34 சீட்டுகள் ஜெயிக்க முடியும். 160 சீட்டுகளில் அதிமுக குறைந்தது 100 சீட்டுகள் ஜெயிக்கும்.திமுகவின் நெடுங்கால கனவு பலிக்காது.தொடர்ந்து ஸ்டாலின் கனவு காணலாம் .

    • skandh - Chennai,இந்தியா

      BJP க்கு 25 க்கு மேல் EDAPPADIAR கொடுக்க மாட்டார் .அது போதும் BJP கட்டாயம் எதிர்க்கட்சி ஆகும் VIJAYAKANTH போல .2021 தேர்தலோட தமிழ்நாட்டை பிடித்த சானியா ஒழியும், DMK ஒழியும். DMK பரிதாபமாகத்தோர்க்கும்.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    வேறு வழி இல்லை.

  • லிங்கம்,சென்னை - ,

    சபாஷ்...!!!

  • Dr.subbanarasu Divakaran - bengaluru,இந்தியா

    pattu varudangatku mel nizhalil kaaydirukkumg dee emm kay marubadiyum aatchikku vandall tamizhagam muzhudum azhiyum.jaggiradai.

  • ஆரூர் ரங் -

    எப்பாடு பட்டாவது திராவிஷத்தை ஒழிக்க வேண்டும். முதல் படி ஹிந்து விரோத தேச விரோத சக்திகளை ஒழிக்க வேண்டும். ஒரு தற்காலிக கூட்டணி சரி. ஆனால் தொடர்ந்து திராவிஷ 😎புத்தியைக் காண்பித்தால் சாம தான பேதங்கள் உதவாது. எவ்வழியிலாவது தீர்த்துகட்டத் தயங்ககூடாது . ஜெய் ஹிந்த்🙏

Advertisement