dinamalar telegram
Advertisement

தேர்தல் தோல்வி; அமெரிக்க கருப்பின மக்கள்மீது குற்றஞ்சாட்டும் டிரம்ப்

Share
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது.

வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார்.
குறிப்பிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாகவும் தனது வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். குடியரசு கட்சி வழக்கறிஞர்கள் தொடர்ந்து அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் தேர்தல் முறைகேடு வழக்கை தொடர்ந்து வருகின்றனர்.
ஆட்சி மாற்றக்குழு எவ்வளவு முயன்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். மறுபக்கம் ஜோ பைடன் தான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனாவை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடத் துவங்கிவிட்டார்.
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் வெறுப்பு அமெரிக்க கருப்பின மக்கள்மீது விழுந்துள்ளது. டிரம்பின் ஆட்சிக்காலத்தில் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் புளாயிட் என்ற கருப்பின நபர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை இனவாதத்தை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில்தான் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க கருப்பின மக்களை சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்யும் குற்றவாளிகள் என்று ட்ரம்ப் மறைமுகமாக குற்றம்சாட்டுவதாகக் கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இந்த அளவுக்கு பதவி வெறி பிடித்த முதல் அதிபரை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன்.

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   நீங்க அந்த நாட்டுலயே பிறந்து வளந்தவர்றாங்க ??? . நம்ம நாட்டை , அமைச்சர்களை எவ்வளவு தெரியும் உங்களுக்கு ?

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கலவரத்தை ஏற்படுத்துகின்றார்...

 • vbs manian - hyderabad,இந்தியா

  சர்வ தேச விவகாரங்களில் டிரம்ப் நன்றாகவே செயல் பட்டார். தீவிரவாதத்துக்கு பலத்த எதிர் நடவடிக்கை. சீனாவை தைரியமாக எதிர் கொண்டார். அதே சமயம் வட கொரியாவுடன் சமரசம் பேசினார். பல நாடுகளில் அமெரிக்கா ராணுவத்தை வாபஸ் பெற்றார். அமெரிக்காவின் தண்ட செலவுகளை குறைத்தார். அமெரிக்கா இளைஞர்களுக்கு உள்ளூர் வேலையில் முன்னுரிமை அளிக்க முயன்றார். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை திருப்தியில்லை கறுப்பர்கள் மீதான போலீஸ் கொடுமை விசா கட்டுப்பாடுகள் நிர்வாக விஷயங்களில் அதிகாரிகளை கையாள்வதில் ஆணவம் போன்ற விஷயங்கள் அளவுக்கு மேல் பிரச்சாரம் செய்யப்பட்டு தோல்வி.

 • mindum vasantham - madurai,இந்தியா

  அமெரிக்கா கறுப்பின மக்கள் மீது பாதிரியார்கள் நடத்திய கொடுமை ரொம்ப பயங்கரமானது உண்மையில் புத்த மதம் மட்டுமே சிறப்பு

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மனநிலை குன்றிய மனிதராக இருக்கிறாரே பாவம்.

  • vidhuran - chennai,இந்தியா

   மன நிலையெல்லாம் தவறவில்லை. அவ்வளவு அகங்காரம். பதவி பித்து செய்யும் தவருக்கெல்லாம் தண்டனை இல்லை என்ற இறுமாப்பு. நேற்று மதியபிரதேசத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெண் போலீஸ் ஒருவர் தெருவில் அடித்துக்கொண்டே சென்றதை ஒரு செய்தி சானெல்லில் பார்த்தேன். அப்படி இவரை தண்டிக்கவேண்டும். நிறைவேற்றுமையை பதவியில் இருந்து தோற்கடிக்கப்பட்டதற்காக கூறும் நபர்களுக்கு தண்டனை இப்படித்தான் இருக்க வேண்டும்.

Advertisement