dinamalar telegram
Advertisement

தொண்டர்கள் உழைத்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி: அமித்ஷா

Share
சென்னை: இப்போது இருந்தே உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி வரும் என தமிழக பா.ஜ.,வினருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கூறினார்.

பல்வேறு திட்டப்பணி துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழா மேடையில் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதை உறுதி செய்தார்.

தொடர்ந்துதமிழக பா.ஜ.,வினருடன் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மற்றும் மகளிர் அணியை சேர்ந்த குஷ்பு,கவுதமி, காயத்ரிரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். தொடர்ந்து அமித்ஷா கூறியதாவது:


பல மாநிலங்களில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்த நிலை மாறி பா.ஜ., ஆளும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழக பா.ஜ., தொண்டர்கள் உழைக்க வேண்டும். இப்போது இருந்தே உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி வரும். பூத் கமிட்டியை வலுப்படுத்தவும் தேர்தல் பணியை விரைவுபடுத்தவும் வேண்டும். கூட்டணி அமைப்பதை நாங்கள் பார்த்துகொள்கிறோம். நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஅமையும் என பா.ஜ. தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: ஆட்சியில் பா.ஜ., பங்குபெறும் .அந்தநம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கூறினார்.

தொடர்ந்து பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் கூறுகையில் தமிழகத்தில் எப்படி செயல்பட வேண்டும் என அமித்ஷா அறிவுரை வழங்கினார் என கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (47)

 • Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பொய் பேசி திரியும் திராவிட விஷ ஜந்துக்களை தூக்கி சிறையில் போட்டால் தான் தாமரை மலரும்

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   அதிமுக வ சொல்றீங்களோ ? சரி உங்க கூட்டணி இப்போ யார்கூட ?

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தொண்டர்களே, நீங்க அவல் கொண்டுவாங்க.... நான் உமி கொண்டுவர்றேன். எல்லோரும் ஊதி, ஊதி தின்னுவோம்.

 • sanakyan - amerka,இந்தியா

  தொலைநோக்கு பார்வை .... வெல்லும் வரை தீராது அமித்ஷா வின் .வேட்கை ....பெறுங்கள் தமிழரின் வாக்கை ...தமிழகத்தில் நல்ல ஆடசியாளர்கள் வர வேண்டும் என்று காலியாக இருக்கிறது இருக் கை .....நல்லாட்ச்சி தரட்டும் உங்கள் வருகை ....

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   யாத்திரைக்கு கூட்டம் சேரும். கைதும் "பேருக்கு" நடக்கும்.

 • Naresh Giridhar - Chennai,இந்தியா

  தமிழர்களை வெறுக்கும் பிஜேபி தமிழ் நாட்டில் எப்படி வோட்டு வாங்க முடியும் ?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  அப்படியென்றால். ஏன் கூட்டணி? பாஜக தனித்து நின்று வெல்லுமா? தனித்து நின்று வெல்லும் என்று சொல்கிறார்கள். எனவே, தனித்து நிற்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அடிப்படைக் கொள்கையில் இருந்து விலகாது என்று நம்புவோமாக. 1967 ஐக் கொஞ்சம் நினைப்போமா? 1977 ஐக் கொஞ்சம் சிந்த்தித்துப் பார்ப்போமா? பேரறிஞர் அண்ணாவையும் புரட்சித்தலைவரையும் புரட்சித்தலைவியையும் கொஞ்சம் மதிப்போமா?

Advertisement