dinamalar telegram
Advertisement

கட்சியை வலுப்படுத்த நாடு முழுதும் யாத்திரை

Share
Tamil News
கட்சியை வலுப்படுத்தவும், தே.ஜ., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், நாடு முழுதும், 100 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா முடிவு செய்துள்ளார்.
மத்தியில், 2014ம் ஆண்டிலிருந்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தெலுங்கு தேசம், சிவசேனா, அகாலி தளம் உட்பட பல கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ளன.இந்த ஆண்டு துவக்கத்தில், பாஜ., புதிய தலைவராக, ஜே.பி.நட்டா பொறுப்பேற்றார்.

இவரது தலைமையில், பா.ஜ., சந்தித்த முதல் தேர்தலாக, டில்லி சட்டசபை தேர்தல் அமைந்தது. ஆனால், தேர்தலில், பா.ஜ., படுதோல்வியை சந்தித்தது.இந்நிலையில்தான், சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது.


தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது தான், நட்டாவுக்கான அக்னி பரீட்சையாக கருதப்படுகிறது.மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் இம்முறையாவது, கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.இந்நிலையில் தான், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தே.ஜ., கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியாகவும், நாடு முழுதும் யாத்திரை மேற்கொள்ள, ஜே.பி.நட்டா முடிவு செய்துள்ளார்.

'ராஷ்ட்ரீய விஸ்திரித் பிரவாஸ்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, 100 நாட்கள் நடக்க உள்ளது. யாத்திரையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செல்ல, நட்டா முடிவு செய்துள்ளார். விரைவில், யாத்திரைக்கான தேதி உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது சிறப்பு நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    இங்கே ஆரிய பிஜேபி உள்ளே வரக்கூடாது....

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண் இது பெரியார் மண்

    • வெற்றிக்கொடி கட்டு - CHENNAI,இந்தியா

      பெரியார் பெயரை இவ்வளவு தடவை சூப்பர் இது தான் வேலின் மகிமை

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    நாட்டுக்கு ஏதாச்சும் பைசா பிரயோஜனம் உண்டா ?

    • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

      ஹிந்தியில் பேசி இருக்கிறார் .

  • konanki - Chennai,இந்தியா

    தலைவரின் மகன் என்ற ஓரே தகுதிக்காக உளறு வாயர்களை கட்சி தலைவராக நியமிக்கும் கட்சி இல்லை. உழைப்பு யுக்தி தொண்டர்களுடன் களப்பணி அரசாங்க திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய செய்யும் அரசியல் குறுக்கீடு அற்ற நிர்வாகம் என எல்லாம் எப்போதும் நீருபிக்க வேண்டிய அவசியம் . இந்த உந்துதல் உள்ள கட்சி தலைவர்.

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    யாத்திரை ஒரு பக்கம் இருக்கட்டும் நாட்டின் பொருளாதாரம் பங்களாதேஷ் விட பின் நோக்கி போகிறது என்ன செய்ய போகிறீர்கள் . இந்தியா ஈரான் மாதிரி போயிருமோ ?

    • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

      இந்தியாவில் தனிநபர் வருமானம் பங்களாதேஷ் விட குறைவுதான் காரணம் ஆடை உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய துறைகளில் அந்நாடு சிறந்து விளங்குகிறது

Advertisement