dinamalar telegram
Advertisement

ஆண்மை குறித்து போலி குற்றச்சாட்டு: டில்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு

Share
Tamil News
புதுடில்லி: 'விவாகரத்து வழக்குகளில், ஆண்மை குறைபாடு குறித்து போலியான குற்றச்சாட்டை பெண்கள் முன்வைப்பது, கொடுமையான செயல்' என, டில்லி உயர் நீதிமன்றம்
கண்டித்துள்ளது.

விசாரணை



டில்லியைச் சேர்ந்த தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கோரி, கீழமை நீதிமன்றத்தை நாடினர்.அந்த வழக்கு விசாரணையில், 'என் கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பதால், அவருடன் சேர்ந்து வாழ முடியாது' என, மனைவி தெரிவித்தார்.ஆனால், மருத்துவ நிபுணர் பரிசோதனையில், கணவருக்கு ஆண்மை குறைபாடு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மனு தாக்கல் செய்ததால், இந்த வழக்கில், அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கி, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், தன் கணவனுடன் மீண்டும் சேர்ந்ந்து வாழ விரும்புவதாகவும், கீழமை நீதிமன்றம் அளித்த மனுவை தள்ளுபடி செய்யும்படியும் கோரி, மனைவி தரப்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாதிப்பு



இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:ஆண்மை குறைபாடு குறித்து கணவன் மீது போலியான குற்றச்சாட்டை கூறி விவாகரத்து பெறுவது, கொடுமையான செயல். முந்தையை வழக்கின் முழு விசாரணையிலும், 'என் கணவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது' என, மனுதாரர் தரப்பில் திரும்ப திரும்ப தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், சம்பந்தப்பட்ட நபரை, உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கும். எனவே, மனுதாரர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விவாகரத்து வழங்கி, டில்லி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    Now that Lady to be prosecuted for Telling Lies in the Court and to be sentenced to LIFE IMPRISOMENT, not less than that.How that Judge let her easily out, Telling Lies in Court is Accep? How that Gentleman bore that DIFFICULTY

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    கொடுமை, இந்த மாதிரி குற்றச்சட்டுகள் கூறுவது.

  • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

    இங்கே ஆரிய பிஜேபி உள்ளே வரக்கூடாது...

  • Somiah M - chennai,இந்தியா

    விவாக ரத்து பெறவேண்டிய மனைவி கணவனைப் பற்றி சொல்லக்கூடிய மிக சுலபமான குறைபாடு இந்த ஆண்மையை பற்றிய குறைபாடுதான் .

    • வெற்றிக்கொடிகட்டு - CHENNAI,இந்தியா

      அந்த காரணத்தை சொன்னா உறுதியா விவாகரத்து கிடைக்கும் என்பதால் வக்கீல்கள் அதைத்தான் சொல்லக் சொல்லி வற்புடுத்துறாங்க என்று கேள்விப்பட்டிருக்கேன்

    மேலும் செய்திகள் :

Advertisement