dinamalar telegram
Advertisement

மாவட்ட வாரியாக நிலவரம்: அதிகபட்சமாக சென்னையில் இன்று 589 பேர் டிஸ்சார்ஜ்

Share
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,21) அதிகபட்சமாக சென்னையில் 589 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 2.03 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 486 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 2,11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 148 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும், திருவள்ளூரில் 114 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், திருப்பூரில் 70 பேருக்கும், சேலத்தில் 66 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு



இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு, கோவை, வேலுார், திருப்பூரில் தலா 2 பேரும், ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தஞ்சாவூரில் தலா ஒருவரும் என 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 589 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2,03,249 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 190 பேரும், திருவள்ளூரில் 145 பேரும், செங்கல்பட்டில் 142 பேரும், திருப்பூரில் 98 பேரும், ஈரோடில் 97 பேரும், வேலுாரில் 88 பேரும், சேலத்தில் 86 பேரும், காஞ்சிபுரத்தில் 81 பேரும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 52 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



Tamil News
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement