dinamalar telegram
Advertisement

தமிழகத்திற்கு நிதியுதவி :அமித் ஷாவிடம் 3 கடிதம்

Share
சென்னை :'நதிகள் இணைப்பு திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முதல்வர் இ.பி.எஸ்., மூன்று கடிதங்கள் கொடுத்தார்.

அந்தக் கடிதங்களில், முதல்வர் கூறியிருப்பதாவது:
* கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி, ஜல்சக்தி துறைக்கு அறிவுறுத்த வேண்டும்

* காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, 8,277 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து, நிதியுதவி வழங்க வேண்டும்

* 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்திற்கு, 10 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடுதயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை, மாநில அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்


* மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, மெகா ஜவுளி தொழில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில், மெகா ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்

* சென்னை அருகே, மருத்துவ பூங்கா மற்றும் மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைக்க வேண்டும்
* சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் மதிப்பில், 118.9 கிலோ மீட்டருக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும். எனவே, திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதத்தை வழங்க வேண்டும். இவ்வாறு, கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (28)

  • Sri - Ghisin,கோஸ்டாரிகா

    Anaithu thittagalayum Central govt oru team pottu implement pannanum..Dravidian parties only LOOT..

  • RAJA🇮🇳ராஜா🇮🇳Jaihind. -

    தேர்தல் முடியும்வரை எந்த பண உதவியும் செய்ய வேண்டாம்.எல்லா கட்சியினரும் கடைசி நேரத்தில் கிடைத்ததை பங்கு போடவே செய்வார்கள்.பணத்தை வீணாக்க வேண்டாம் அமித்ஷாஜி.🇮🇳JAIHIND🇮🇳

  • RAJA🇮🇳ராஜா🇮🇳Jaihind. -

    தேர்தல் முடியும் வரை எந்த பண உதவியும் செய்ய வேண்டாம். எல்லா கட்சியினரும் கடைசி நேரத்தில் கிடைத்ததை பங்கு போடவே செய்வார்கள். பணத்தை வீணாக்க வேண்டாம் அமித்ஷாஜி. 🇮🇳JAIHIND🇮🇳

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    ஆப்பு எப்படி கருணாநிதி சர்க்காரியா வீரணத்தில் செய்தாரே அது போலவா

  • ஆப்பு -

    உடனடியா ஒரு ரெண்டு லட்சம் கோடி நிதி கிடைத்தால் தேர்தலை உறுதியோடு சந்திக்கலாம்.

    • Srinivas - Chennai

      ///உடனடியா ஒரு ரெண்டு லட்சம் கோடி நிதி கிடைத்தால் தேர்தலை உறுதியோடு சந்திக்கலாம்./// நிலுவையில் உள்ள நூற்றுக்கணக்கான ரைடுகளின் கோப்புகளையும் தள்ளுபடி செய்யவும், மேலும் பல ஆயிரம் கோடிகள் உதவி செய்ய கேட்டுத்தான் அந்த கோரிக்கை கடிதம்...

Advertisement