dinamalar telegram
Advertisement

இந்தியாவில் 13 கோடியை கடந்தது கொரோனா பரிசோதனை

Share
புதுடில்லி:இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்துள்ளது.கொரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.


இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று வரையிலான கணக்கீடுகளின்படி, 13 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 22 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளது. இத்துடன் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    130 கோடியில், 13 கோடி பரிசோதனை. வாவ் உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயம்.

    மேலும் செய்திகள் :

Advertisement