dinamalar telegram
Advertisement

பஞ்சாபில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு வாபஸ்

Share
சண்டிகர்: பஞ்சாபில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வரும் பாரத் கிசான் யூனியன், உள்ளிட்ட விவசாய அமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்காக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்தார். அதன்படி சண்டிகரில் உள்ள கிசான் பவனில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து நவம்பர் 23ம் தேதி முதல் தற்காலிகமாக ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாரத் கிசான் யூனியன் அமைப்பினர் கூறுகையில், ‛வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். இல்லையெனில் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்,' எனக்கூறினர்.
முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது: நவம்பர் 23ம் தேதி இரவு முதல் 15 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன். மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இதன் மூலம் சரிசெய்யப்படும். மத்திய அரசு உடனடியாக பஞ்சாபில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • konanki - Chennai,இந்தியா

    15 நாட்களில் பஞ்சாப் கோடவுனில் இருக்கும் நெல் கோதுமை மற்ற மாநிலங்களுக்கு கூட்ஸ் வண்டி மூலம் உடனடியாக எடுத்து வந்து விட்டால் போதும். பிறகு நிரந்தரமாக ரயில் மறியல் செய்யட்டும் என்று விட்டு விடலாம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    கட்டுமரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நினைவு படுத்துகிறது. காலை, மத்திய உணவுக்கு இடையே, நான்கு AC யின் நடுவில் படுத்துக்கொண்டு என்ன ஒரு ஆர்ப்பாட்டம்

  • kulandhai Kannan -

    காங்கிரஸ் தூண்டுதலோடு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு மூக்குடைப்பு. சரக்கு ரயில்களை மத்திய அரசு நிறுத்தியதால், பஞ்சாபில் உற்பத்தியான விளைபொருட்கள் தேங்கி, அடுத்த பயிருக்கு வேண்டிய யூரியா உரங்களும் வராமல் திக்கு முக்காடி இப்போது சரணடைந்து விட்டனர். மோடியோடு மோதினால் இதுதான் கதி. இதுபோன்ற ஷாக் ட்ரீட்மெண்ட் சில ஆடிக்கார் பாண்டியர்களுக்கும் தரப்பட வேண்டும்.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    கண்டிஷன் எதுவும் போடாமல் வாபஸ் வாங்கினால் மட்டும் ரயில் சேவையை ஆரம்பிக்கலாம்.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    பஞ்சாப்பில் விவசாயிகள் என்று சொல்லி காங்கிரஸ் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் யாருமே கண்டு கொள்ளவில்லை நாட்டில் இப்போது உள்ள கொரோன சமயத்தில் அதைக்கட்டுப்படுத்த ஆயத்தமாக உள்ள மத்திய அரசு, இதை மாநில போராட்டமாக கருதி நன்மை தீமைகளுக்கு மாநிலமே பொறுப்பு என்றது போல் இருந்துவிட்டது. மூக்கு உடை ய்ப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் இப்போது 15-நாட்கள் கைவிடபட்டது என்று கூறி, பின் வாங்குகிறது. இதனால் நஷ்டம் மாநிலத்திற்கே. சரியான பாடம் புகட்டப்பட்டது.சுடலைக்கு இது ஒரு எச்சரிக்கை போராட்டம் நடத்தினால் நஷ்டம் உனக்குத்தான்

Advertisement