dinamalar telegram
Advertisement

அமெரிக்காவுடன் தைவான் பொருளாதார ஒப்பந்தம்; அதிருப்தியில் சீனா

Share
வாஷிங்டன்: அமெரிக்காவும் தைவானும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது சீனாவை முன்னதாக அதிருப்தி அடையச் செய்து இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தைவானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ குவாட் நாடுகளை ஒன்றிணைத்து தைவானுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல்படுத்தி அதனை கையகப்படுத்த முயன்றது. இதற்கு தைவான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சீனாவின் பிடியில் இருந்து தப்புவதற்காக தைவான் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தைவான்-அமெரிக்கா ஆகிய நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கு சீனா கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளது. சிறிய தீவு நாடான தைவான் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி கண்ட நாடு. முன்னதாக சீன ராணுவத்தை எதிர்க்க தைவான் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    கோவிட் வைரசை பரப்பிய சீனாவிற்கு வேறொரு வைரஸ் அனுப்பி வைக்க முடியாதா?

  • Balasubramanian Sundaram - NewYork,யூ.எஸ்.ஏ

    தாய்வானிடம் நாமும் நல்ல தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும். அருமையான நாடு. கடும் உழைப்பாளிகள். இன்றைய முதன்மையாக உள்ள எல்லா விஞ்ஞான மாற்றங்களும் உண்டு.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நாடுகள் கைகட்டிக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்க பாகிஸ்தானா? பாகிஸ்தான் என்று அழைப்பதை விட, பாதிசீனா என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    தாய்வானுடைய இந்த அமெரிக்கா ஒப்பந்தத்தை பற்றி மகிழ்ச்சி. இதேபோன்று மற்றநாடுகளும் சீனாவுடன் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும். வைரஸை பரப்பி பல லட்சம் மக்களை கொன்ற சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும்.

  • bal - chennai,இந்தியா

    இதே மாதிரி திபெத் கூட ஒப்பந்தம் செய்யவேண்டும்.

    மேலும் செய்திகள் :

Advertisement