dinamalar telegram
Advertisement

அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: கமலா ஹாரிஸ்

Share
வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1.22 கோடி பேர் பாதிக்கப்பட்டு 73.16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; 2.60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தான் காரணம் என தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒத்துழைக்காமல் இருந்தால் அமெரிக்கா இன்னும் பல உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதன் சார்பாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து பைடன் - ஹாரிஸ் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து அமெரிக்கருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • THANARAJ ABRAHAM - delhi,இந்தியா

    இலவச தடுப்பூசி சாத்தியமே Corona தடுப்புக்காகக் கோடிக்கணக்கான டாலர்களை செய்வதற்கு பதிலாக இலவசமாக வழங்கினால் corona தடுப்புப் பணிக்காக செலவு செய்ய வேண்டியதில்லை. பொருளாதாரம் உயர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    இதைத்தவிர இந்தியாவுக்கும் வேறு வழியில்லை . வெறும் பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பொசி போட்ட காலம் போய் , பெரியவர்களும் போடும் காலம் மாறி , இப்போது அனைவருக்கும் தடுப்பொசி போடும் காலம் வந்துவிட்டது . அதனால் தான் , பங்குச்சந்தைகள் மட்டும் தறிகெட்டு திரிகின்ற்றன. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று இருக்கின்றனர். உலகமே முடங்கிக்கிடக்கும்போது , ஒட்டுமொத்த மனிதகுலம் ஒடுங்கி மிரண்டு போயிருக்கும்போது , பொருளாதார சந்தைகள் மட்டும் எந்த வித சல சலப்பும் இல்லாமல் , பயமும் இல்லாமல் , விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கின்றன .

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    அங்கேயும் நமது நாட்டு ஆட்சியாளர்கள் போல் முந்தைய ஆட்சியாளரை குறை சொல்லும் பாணியும்,இலவச அறிவிப்பும் தொடர்வது உலகத்தில் சாதாரணம் என்று இதன் மூலம் தெரிகிறது.

  • sankaseshan - mumbai,இந்தியா

    நம்மவூரு இலவசம் வியாதி அமெரிக்காவிலும் பரவிவிட்டது . நல்ல முன்னேற்றம் அமெரிக்காவில் அடுத்தது இடஒதுக்கீடு ?

  • S. Narayanan - Chennai,இந்தியா

    எல்லாம் தமிழ் நாட்டை பாத்து காப்பி அடிக்கிறாங்க.

Advertisement