dinamalar telegram
Advertisement

பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

Share
ஜம்மு:காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

இன்று அதிகாலை 1 மணி முதல், நவ்ஷேரா செக்டாரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், ஹவில்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரர் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். பாக்., அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் உடனடியாக கடுமையான பதிலடி கொடுத்தது. இரு தரப்பிற்கு இடையிலான மோதல் நீண்ட நேரம் நீடித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அத்துமீறலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 5 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடுமையான தாக்குதலில் 8 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முகாம்கள், பதுங்கு குழிகள், ஆகியவை அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    வீர மரணம் அடைந்த இந்திய வீரரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இனிமேலும் இந்தியா இதுபோன்ற பாகிஸ்தானின் அத்துமீறல்களை தடுக்காமல் இருந்தால் அது சரியல்ல. அவர்களுக்கு தகுந்த பாடம் கட்பிற்கவேண்டும். வெறுமனே பேப்பரில் எழுதி அதை படித்து எச்சரிக்கைவிடும் வழக்கத்தை மாற்றி, surgical strike போன்ற நடவடிக்கையால் அந்த கோழைகளுக்கு தகுந்த பாடம் கட்பிக்கவேண்டும்.

  • Elango - Kovai,இந்தியா

    இஸ்ரேல் பானி தான் சரி...

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    காட்டுமிராண்டிகளுக்கு அவன் மொழியில் பதில் சொன்னால் தான் தெரியும். ஐரோப்பாவை இவங்களை உள்ளே விட்டு விட்டு பிரச்சனைகளில் சிக்கி கொண்டு உள்ளது.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    காஷ்மீரில் எல்லையை பாதுக்காக்க கொஞ்சமும் சம்மந்தமில்லாத தமிழ்நாட்டு ஆந்திர மகாராஷ்டிரா ஜார்கண்ட் பீகார் இளைஞர்கள் ..எந்த காஷ்மீரியும் எல்லையில் பாதுகாப்பு பணியில் இல்லை ..இஸ்ரேல் பாணியில் எல்லைக்கு அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத வகையில் தாக்குதல் நடத்த வேண்டும் ..காஸ்மீர் இளைஞர்களுக்கு ஐந்தாண்டு ராணுவ பயிற்சி கட்டாயமாக்க வேண்டும் ..

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

    திருப்பி அடிக்கும் அடி பலமாக இருக்க வேண்டும் , மீண்டும் இதுபோல் அவர்கள் தாக்க நினைக்க கூடாது அந்த அளவுக்கு இருக்க வேண்டும்.

Advertisement