dinamalar telegram
Advertisement

போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... : டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!

Share
சென்னை : தமிழகம் வரும் அமித்ஷாவை எதிர்த்தும், ஆதரித்தும் சமூகவலைதளங்களில் காரசாரமான சண்டை நடப்பதால் அவரை வைத்து டிரெண்ட் ஆகிறது.


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான கூட்டணி பேச்சுக்கும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்காக இன்று(நவ., 21) சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து செயல்படுத்துவதில் வல்லவரான இவரை சாணக்கியன் என்று ஒரு சாரர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அவரின் வருகை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அமித்ஷா வருகையை எதிர்த்து GoBackModi போன்று GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கை இங்குள்ள கட்சியினரின் ஐ.டி., அணியினர் மற்றும் பொதுவாக உள்ளவர்களும் டிரெண்ட் செய்கின்றனர். இதற்கு போட்டியாக பா.ஜ., ஆதரவாளர்கள் TNWelcomesAmitShah என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.




''தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம். இங்கு பா.ஜ.வின் ஜம்பா பலிக்காது. அமித்ஷாவின் சாணக்கிய தனமும் எடுபடாது'' என ஒரு சிலர் கருத்து பதிவிட்டு நிறைய நக்கலான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக ''பிரதமரின் நம்பிக்கைக்குரிய, நவீன இந்தியாவின் இரும்புமனிதர், தமிழ்நாட்டு அரசியலை மாற்றியமைக்க வருகை தரும் அமித்ஷாவை வரவேற்கிறோம்'' என ஒரு சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

அமித்ஷாவின் வருகையை வைத்து ''#GoBackAmitShah, #TNWelcomesAmitShah, #Tamilnadu, #TNwelcomeschanakya'' உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (45)

  • ANTONYRAJ - MADURAI,இந்தியா

    திமுகதான் தைரியமான ஆளாச்சே கருப்பு பலூன பறக்க விட்றதானேஇதிலிருந்து அவரை பார்த்து திமுகவினர் பயந்து நடுங்குவது நன்றாக தெரிகிறது.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. நேற்று அமித்ஷா பேசியதற்கு எந்தவித reaction இல்லை

  • ramani - dharmaapuri,இந்தியா

    People of Tamil Nadu welcomes Amit Shah always. People of Tamil Nadu don't want Dmk and co. People of Tamil Nadu don't want Anti Nationals and Anti Hindu parties.

  • ALAGAPPAN NACHIAPPAN NACHI - ,

    வெற்றி வெற்றி பாரத மாதகி ஜெ

  • P. Siresh - Chennai,இந்தியா

    போங்க என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வாங்க என்று சொல்வது, ஒருவரது தனிப்பட்ட விருப்பம்.

    மேலும் செய்திகள் :

Advertisement