dinamalar telegram
Advertisement

டிரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா

Share
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வார துவக்கத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அவர் தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் காணப்படவில்லை எனவும், டாக்டர்களின் அறிவுரைகளை முழுமையாக கடைபிடித்து வருகிறார்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர், டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் அவர்களது மகன் பாரோன்(14) ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சில நாட்கள் ராணுவ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டிரம்ப்பிற்காக, மூத்த மகன் டிரம்ப் ஜூனியர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Raj - nellai,பஹ்ரைன்

    குடும்பமே கொரோனா தான்

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    அவருக்கு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?

Advertisement