dinamalar telegram
Advertisement

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு கேள்வித்தாளில் குளறுபடி

Share
காட்டுமன்னார்கோவில் : பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி ஏற்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அலட்சியத்தால் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் மாற்று கேள்வித்தாள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு தொழில் நுட்ப கல்வி இயக்கம் கேள்வித் தாள் தயாரித்து மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிறது. மாணவர்களுக்கு 18ம் தேதி முதல் முதலாம் இடைத்தேர்வு காலை 10.30 முதல் 12.30 மணி வரை நடக்கிறது.
மொத்த முள்ள 5 யூனிட் பாடங்களில் முதலில் உள்ள 3 யூனிட்களில் மட்டுமே கேள்விகள் இருக்க வேண்டும்.ஆனால் நேற்று நடந்த 3ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு கேள்வித் தாள் (code:437), (code:34052) ஆகியவற்றில் முதல் 3 யூனிட்களுக்கு பதிலாக 5 யூனிட்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள், கல்லுாரி ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். பின், தேர்வு நடத்தும் மாவட்ட அதிகாரிகள் மூலம் தொழில்நுட்ப கல்வி இயக்க அலுவலகத்திற்கு தெரிவித்து, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு புதிய வினாத்தாள் ஆன் லைனில் வெளியிடப்பட்டது. அதனை மாணவர்கள் டவுன் லோடு செய்து தேர்வு எழுதினர். தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement