Load Image
Advertisement

போதை பொருள் பயன்படுத்துவார் இம்ரான் கான்: மாஜி வீரர் புகார்

 போதை பொருள் பயன்படுத்துவார் இம்ரான் கான்: மாஜி வீரர் புகார்
ADVERTISEMENT
இஸ்லாமாபாத்:''பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிரதமருமான, இம்ரான் கான், போதைப் பொருட்களை பயன்படுத்துவார்,'' என, முன்னாள் கிரிக்கெட் வீரர், சர்பராஸ் நவாஸ் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சர்பராஸ் நவாஸ், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்து உள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: நானும், இம்ரான்கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் போதைப் பொருள்களை பயன்படுத்துவார். வாயில் மெல்வது, புகைப்பது என, பல வழிகளில், போதைப் பொருள்களை அவர் பயன்படுத்துவார்.

Latest Tamil News
கடந்த, 1987ல், இங்கிலாந்து அணியுடன் விளையாடச் சென்றோம். அப்போது அவர் சரியாக பந்து வீசவில்லை. அதனால் அவர் விரக்தியில் இருந்தார். நாடு திரும்பியதும், இஸ்லாமாபாதில் உள்ள என் வீட்டுக்கு வந்தார். அவருடன் மோஷின் கான், அப்துல் காதிர், சலீம் மாலிக் ஆகிய முன்னாள் வீரர்களும் வந்தனர். என் வீட்டில், அவர் போதைப் பொருளை பயன்படுத்தினார்.


லண்டனில் இருந்தபோதும், அவர் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். இதை அவர் மறுக்க முடியாது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு, பல சாட்சியங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


இம்ரானின் முன்னாள் மனைவி ரேஹம் கானும், இதுபோன்ற புகார்களை பலமுறை கூறியுள்ளார். 'இம்ரான் கான் போதைப் பொருள்கள் எடுத்துக் கொள்வார்; அவர் ஒரு பெண் பித்தர்' என, ரேஹம் கான், பலமுறை கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (14)

  • vijay - coimbatore,இந்தியா

    //...காபி கூட போதை வஸ்து தான்...// சொம்பு எப்பவும் கையிலே இருக்கும் போல கீழே வைக்கிறதே கிடையாதா?

  • kulandhai Kannan -

    இப்போதுதான் புரிகிறது, ஏன் ராகுலுக்கு இவர்மீது கரிசனம் என்று.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    நபி காலத்தில் மது மட்டும் இருந்ததால் முஸ்லிம்களுக்கு அதை தடை செய்தார் . இப்போதுள்ள சிகரெட் போதை வஸ்துக்கள் அப்போது அர்பியாவில் இல்லாததால் அதை பற்றி எதுவும் கூறவில்லை ஆகையால் சிகரெட் பிடிக்கும் முஸ்லீம் போல போதை வஸ்து பயன்படுத்தும் இம்ரான் இஸ்லாமியரே

  • ஆப்பு -

    காபி கூட போதை வஸ்து தான்.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    கண் கூடாக பார்க்கிறோம் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை.அவர்களின் கூட்டம் பெரிது , அதில் ஒரு சிலரே குண்டு வைப்பது, கள்ள கடத்தல் செய்வது, மற்ற மதத்தினரின் வழிபாட்டு தளங்களை இடிப்பது, வழிபடுவோரை அங்கேயே சுட்டு கொல்வது, வெடி குண்டு வைத்து தகர்ப்பது,வேண்டுமென்றே மற்ற மாதத்து பெண்களை குறிவைத்து கெடுப்பது .....இப்படி அணைத்து அநியாயங்களையும் செய்தாலும் இன்னமும் குறை சொல்ல மனம் இல்லாத அரசியல்வாதிகளையும் பார்க்கிறோம். ஆனாலும் எவனோ மக்களை பிரிக்க , அவர்கள் நம்மை அடிமைகளாக வைத்தார்கள், கல்வியை கற்க அனுமதிக்க வில்லை என்றெல்லாம் பொய்களை பரப்பி மதம் மாற்ற கையாண்ட யுக்தியை இன்றும் நம்புகிறோம் என்பதை நினைத்தால்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement