ADVERTISEMENT
பேரூர்:நொய்யல் ஆற்றில் தனி வழிகள் அமைத்து, மணல் கடத்தல் தீவிரமாக நடந்து வருகிறது. இயற்கை வளத்தை விடிய, விடிய இப்படி சுரண்டுவோர் மீது, கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது.
அதில், மிக முக்கியமானது மணல் கடத்தல். அதுவும் துவங்கும் இடத்திலேயே, ஆண்டாண்டு காலமாக கடத்தல் நடந்து வருகிறது.தற்போது, தென்மேற்கு பருவமழையால், நொய்யலில் மணல் வளம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையாததால், நொய்யலில் நீர்வரத்து மிகவும் சரிந்து விட்டது. அதை சாதகமாக்கியுள்ள மணல் கொள்ளையர்கள், வாகனங்கள் ஆற்றின் கரை வரை செல்வதற்காக, தனி வழி அமைத்து கடத்துகின்றனர்.இதில், மத்வராயபுரம் கூடுதுறை நொய்யல் ஆற்றில் மணல் கடத்தல் உச்சகட்டம். இரவு நேரங்களில் கழுதைகளை ஆற்றுக்குள் ஓட்டி சென்று, மணலை சாக்கு பைகளில் மூட்டைகளாக்கி கடத்துகின்றனர்.
மறைவான இடங்களில் வழி அமைத்துள்ளதால், கரைகளில் மணலை கொட்டி, தண்ணீர் வடிந்தவுடன் வாகனங்களை வரவழைத்து ஏற்றிச்செல்கின்றனர்.ஒரு யூனிட் ரூ.14,000!தற்போதைய ஊரடங்கு தளர்வுகளால், முடங்கிய கட்டுமானப்பணிகள் வேகமெடுத்துள்ளன. அதே சமயம், கரூர், திருச்சி உள்ளிட்ட மணல் குவாரிகளில் ஒரு லாரிக்கு, மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே லோடு கிடைக்கிறது.
தட்டுப்பாடுகளால், ஒரு யூனிட் மணல் விலை, ரூ.14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எம் சாண்ட் விலையும் யூனிட், ரூ.4 ஆயிரத்துக்கு சென்று விட்டது. அதனால், நொய்யல் ஆற்றை குறி வைத்து, 'கழுதை'கள் வாயிலாக கோடிகளை குவிக்க, திருட்டு வேலை தீவிரமாக நடக்கிறது.
விவசாயி ஒருவர் கூறுகையில், 'விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ள பகுதிகளில், தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. வீடு மற்றும் தனியார் நிலங்களில் குவிக்கப்பட்டுள்ள மணல், எப்படி வந்தது என விசாரித்தாலே, கடத்தல்காரர்கள் யார் என்பதை கண்டறியலாம்' என்றார்.அட்டென்ஷன் கலெக்டர் சார்!

வாசகர் கருத்து (4)
கழுதைகள் மேல் வழக்கு பதிவிடலாம் !!! அது தானே நம் பாரம்பரியம் !!!
திமுக காரர்களை பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி விசாரித்தால் மணல் திருடன்கள் அவர்களாகத் தான் இருப்பார்கள். நொய்யல் ஆறுக்கு சங்க இலக்கியத்தில் தனி இடம் உள்ளது. மிகவும் பழைய கால ஆறு.
இந்த கேடுகெட்ட டாஸ்மாக் டுமீல் நாட்டுல திருடுறதுக்கா சொல்லித்தரனும்.........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
காரணமானவர் களை நடவடிக்கை எடுக்காமல் வாய் பேச முடியாத ஜீவன்களை பிடித்து விடாதீர்ககள். அரசியல்,அதிகாரிகளின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும்.