dinamalar telegram
Advertisement

உயிரை தருவதாக நேர்த்திக்கடன் வங்கி அதிகாரி தற்கொலை

Share
Tamil News
நாகர்கோவில்:வேலை கிடைத்தால், உயிரை தருவதாக வேண்டி இருந்ததால், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து, வங்கி அதிகாரி தற்கொலை செய்தார்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் எள்ளுவிளையைச் சேர்ந்த செல்லசுவாமி மகன் நவீன், 32.இன்ஜினியரிங் படித்த நவீன், வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றார். 15 நாட்களுக்கு முன், மும்பையிலுள்ள பாங்க் ஆப் இந்தியாவில், உதவி மேலாளராக பணியில் சேர்ந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, விமானத்தில் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.

வடசேரி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்தார். நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.நவீன் எழுதிய கடிதத்தில், 'நான் படித்து விட்டு, பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்தேன். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்க வில்லை. வேலை கிடைத்தால், உயிரை காணிக்கையாக தருவதாக கடவுளிடம் வேண்டினேன். 'வேலை கிடைத்ததால் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடம் செல்கிறேன்' என, குறிப்பிட்டு இருந்தார். தகவல் அறிந்த நவீனின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement