dinamalar telegram
Advertisement

பணத்திற்காக கொரோனா பலியை உயர்த்தும் டாக்டர்கள்: டிரம்ப் குற்றச்சாட்டு

Share
வாஷிங்டன்: கொரோனாவால் உயிரிழந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துகின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதற்காக மிச்சிகனில் உள்ள வாட்டர்போர்டு டவுன்ஷிப்பில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் யாராவது உயிரிழக்கும்பட்சத்தில் டாக்டர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால், பலி எண்ணிக்கையை டாக்டர்கள் உயர்த்துகின்றனர்.
ஆனால், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்னை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர். உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது. தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    அது என்னமோ தெரியவில்லை, இந்தியாவில காய்ச்சல் அடித்தால் அதே காய்ச்சல் அமெரிக்காவிலும் அடிக்குது, அமெரிக்காவில் காய்ச்சல் அடித்தால், இந்தியாவிலும் காய்ச்சல் அடிக்குது, அமெரிக்க அதிபர் டொனால் றீகன் ஒரு நடிகர், அவர் தேர்தலில் போட்டி இட்டு வென்று அமெரிக்க ஜனாதிபதியானார், அதுக்கு அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் பெரிய நடிகர் MGR தேர்தலில் போட்டி இட்டு வென்றார், அப்போது அவர் சொன்ன தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானது "அன்று அமெரிக்காவில் (நடிகர் ஜனாதிபதி ஆனார்) இன்று தமிழ்நாட்டில் (நடிகர் முதல்வர் ஆவார்) என்று. அன்னைக்கு பிடித்த காய்ச்சல் தொடருது போல,

    • Srinivasan Krishnamoorthy - Chennai,இந்தியா

      Reegan became president only 4 years after MGR. Reegan became American president in 1981 while MGR was CM in 1977.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    உடல் முழுதும் பொய்...

  • S. Narayanan - Chennai,இந்தியா

    உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள அரசியல் வாதிகள் மருத்துவ மனைகளுடன் கூட்டு சேர்ந்து கொரோனா கொள்ளை அடிக்கிறார்கள்.

  • koradurairaj - tirupur,இந்தியா

    சாதரண சளி, காய்சலை கொரோனா எனக்கூறி பணம் கறக்கும் கார்ப்பரேட் மருத்துவனைகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளனர், இந்த கொள்ளைக்கு அரசும் துணை போகிறதோ என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் கருதி வருகின்றனர் இந்த நிலையில் உண்மையை உரக்க சென்ன ட்ரம்ப் வாழ்க வளமுடன்..

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    பணத்திற்காக கொரோனா இல்லாதவர்களையும், கொரோனா பாதிப்பு ஏட்பட்டிருக்கிறது என்று இந்தியாவின் பல மருத்துவமனைகளில் இன்றும் பணம் பிடுங்குகிறார்கள். இந்த அவலத்தை என்ன என்று சொல்வது, யாரிடம் புகார் செய்வது?

Advertisement