dinamalar telegram
Advertisement

சிறந்த நிர்வாகத்தில் 2வது இடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Share
சென்னை: நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.

பி.ஏ.சி. எனப்படும் பொது விவகாரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றில் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களில் கேரளா 1.388 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகம் இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  கஸ்தூரி ரங்கன் அவர்களின் தங்க வார்த்தைகளை மேலே தொடுத்துள்ளேன் . புரட்சி தலைவர் ,அம்மா வழியில் எடப்பாடியார் சாதனை தொடரட்டும் .திமுக தோற்கடிப்படும் வரும் ஆண்டு தேர்தலில் .

 • Elango - Kovai,இந்தியா

  அதுதான் நேற்று பெய்த மழையில்.தெரிந்து விட்டதே இவர்கள் ஆட்சியின் லட்சனம். இத்தனைக்கும் எங்கள் உறவினரினின் தெருவில் மழை நீர் வடிகால் என்று ஆறு மாதம் முன்பு வேலை செய்து உள்ளனர். ஒரு நாள் மழையில் வீட்டிற்குள் தண்ணீர் வந்து விட்டது....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "சிறந்த நிர்வாகத்தில் 2 வது இடம்" - போங்க சார் காமெடி பண்ணாமல்.

 • Jay - Bhavani,இந்தியா

  யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகம் முன்னிலை மாநிலம் தான். அதற்கு இங்கு உள்ள மக்கள் தான் முக்கிய காரணம். பின் தங்கியுள்ள மாநிலங்களுக்கும் அங்குள்ள மக்கள் தான் காரணம்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  சுடலையப்பன் கடைசி ஐந்து ஆண்டுகால மைனாரிட்டி ஆட்சியோடு கம்பேர் செய்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சி நூறு மடங்கு மிகச்சிறப்பான ஆட்சி என்றே சொல்லலாம். குறிப்பாக நில அபகரிப்பு இல்லை, கிரானைடு கொள்ளை இல்லை, மின்வெட்டு இல்லை, மாசாமாசம் ஒரு பாராட்டு விழா நடத்தி சினிமா நடிகைகளின் ரெக்கார்ட் டான்ஸை மொதோ வரிசைல வாய பொளந்துக்கிட்டு பார்க்கும் அக்கப்போர் இல்லை. அப்பன், மவன், மவ, மறுமவன், பேரன், பேத்தி கூத்தடிப்பது இல்லை, வாரிசு அரசியல் இல்லை, வாக்கிங் படுகொலை இல்லை. ஆக மறுபடி அந்த கொள்ளைக்கூட்டம் வேண்டவே வேண்டாம். இது குடுக்குறத வாங்கிக்கும், அது இருக்குறத மொத்தமால்ல லவட்டிக்கிட்டு பூடும். மக்கள் ஜாக்கிரதையா இருக்கோணும். பத்து வருடமா கொலப்பசில இருக்காய்ங்க. சிக்குனோம்னா சீனி சக்கர சித்தப்பா,ஏட்ல எழுதி நக்கப்பான்னு சுத்தமா உருவிட்டு உட்டுடுவாய்ங்க.

Advertisement