dinamalar telegram
Advertisement

இந்தியா - அமெரிக்க நட்புறவு

Share
வாஷிங்டன்:''சீனா, ரஷ்யா போன்ற எதிரி நாடுகள் அஞ்சும் வகையில், இந்தியா உடனான அமெரிக்காவின் நல்லுறவு வலுப்பெற்றுள்ளது,'' என, அமெரிக்க குடியரசு கட்சி, எம்.பி., கெவின் கிராமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் டி எஸ்பர் ஆகியோர், இந்தியா வந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினர்.அப்போது, ராணுவ உயர் தொழில்நுட்ப வசதிகள், செயற்கைக்கோள் வாயிலான ரகசிய தரவுகள் மற்றும் முக்கிய தகவல்களை பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை தொடர்பாக, ஐந்து ஒப்பந்தங்கள்கையெழுத்தாயின.

இது குறித்து, அமெரிக்க எம்.பி., கெவின்கிராமர் கூறியதாவது:இந்தியா உடன், அமெரிக்கா நடத்திய பேச்சும், அதைத் தொடர்ந்து கையெழுத்தான ஒப்பந்தங்களும், இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.இது, சீனா, ரஷ்யா போன்ற எதிரி நாடுகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய செய்தி.அதிபர் டிரம்பின் வெளியுறவு கொள்கை குழு, இந்தியா உடனான நல்லுறவை வலுப்படுத்த எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது.இரு நாடுகள் இடையிலான நல்லுறவு வலுப்பெற்றுள்ளதை அடுத்து, புதிய பொருளாதார வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், இரு நாடுகளும் பயன் பெறும். இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.

கெவின் கிராமர், கடந்த ஆண்டு இந்தியா வந்து, அமெரிக்கா உடனான வேளாண், குடியேற்றம், எரிசக்தி துறை பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதுகுறிப்பிடத்தக்கது.இணைந்து செயல்பட முடிவுமத்திய வெளியுறவு விவகாரங்கள் துறையின் சர்வதேச மாநாட்டுப் பிரிவின் கூடுதல் செயலர் வினய் குமார் தலைமையிலான குழு, அமெரிக்க வெளியுறவு துறை உதவி செயலர் பொறுப்பில் உள்ள, பமீலா டி பிரயர் தலைமையிலான குழுவை சந்தித்து பேசியது. அப்போது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என, முடிவு செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement