dinamalar telegram
Advertisement

அரசு அலுவலகங்கள் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்

Share
சென்னை: 2021 ஜனவரி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

  • Skill Bala - Guwahati,இந்தியா

    ஆமா மத்த நாட்கள் எல்லாம் அப்படியே வேலை செஞ்சு கிழிக்கிற மாதிரி

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இப்போ கிடையாதா இன்னும் ரெண்டுமாசன்ம் காத்திருக்கணுமே .திமுக வந்தால் செவ்வாய்கிழமையோ அல்லது வியாழக்கிழமையோ பண்டிகை வந்தால் இனி திங்கள் மற்றும் வெள்ளியும் சேர்த்து விடுமுறை விடப்படும்ஒரே கண்டிஷன் அரசுஊழியர் வாக்குமட்டும் போட்டுடனும்

  • Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா

    அரசு வேலை செய்யும் நாட்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தான் அனால் லஞ்சம் 24/7 அதனால் கவலை இல்லை ஒரு காசு கட்டுப்பட்டு வாரிய பொறியாளர் வீட்டிலே கிலோ கணக்கில் தங்கம் கோடி கணக்கில் பணம் கைப்பற்றும் இந்த நாட்டில் இதை விட சிறப்பு என்ன

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    பாவம் அவர்களுக்கு மிகுந்த வேலை இருபிப்பதால் வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதுமே? நேர்மையானவர்கள் பொறுப்பானவர்கள் லஞ்சம் வாங்காதவர்கள் மக்களுக்கு தெய்வங்களாக இருக்கிறார்கள், ஆனால் வேலையே செய்யாமல் , அரட்டை அடித்துவிட்டு ஆண்டுதோறும் சம்பள உயர்வு பெற்று ஓய்வுக்குப் பிறகும் பதவி நீட்டிப்பு பெற்று இருப்பவர்களை பழிவாங்கி அவர்களை அணுஅணுவாய் சாகடிக்கும் கூட்டங்களை மக்கள் அடையாளம் கண்டும் யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை, அப்படி இருக்க ஒழுங்காக வேலை செய்தால் வாரத்துக்கு இரு நாட்களே போதுமானது, தனியாரிடம் இந்த வாளிகளைக் கொடுத்தால் இவர்களில் நான்கில் ஒரு பாகத்தை வைத்துக்கொண்டு மிக அருமையாக பணிபுரிவார்கள், அரசியல் பேசாமட்டரகள், நேர்மையாக பணியாற்றி மக்களுக்காக பணியாற்றுவார்கள், நமது நேரமும் காலம் விரயம் என்று தெரிந்தும் நாம் வாசகர் பகுதியில் பங்கேற்று நம் மனஅமைதிக்கு பகிர்ந்தது கொள்கிறோம், வேறு வழி இல்லை, நமக்கு நாமே என்றாகிவிட்டது, வந்தே மாதரம்

  • Loga - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    என்ன சலுகைகள் அறிவித்தாலும் அரசு ஊழியர் ஒட்டு கிடைக்காது ....

Advertisement