dinamalar telegram
Advertisement

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் டிஸ்சார்ஜ்

Share
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,24) அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.81 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 165 பேருக்கும், சேலத்தில் 148 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 140 பேருக்கும், திருப்பூரில் 101 பேருக்கும், ஈரோடில் 98 பேருக்கும், நாமக்கலில் 83 பேருக்கும், மதுரையில் 77 பேருக்கும், வேலூரில் 63 பேருக்கும், தஞ்சாவூரில் 61 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உயிரிழப்பு



இன்று செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, காஞ்சிபுரத்தில் தலா 4 பேரும், சென்னை, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், நாகப்பட்டினம், சேலம், தூத்துக்குடி, வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,240 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,78,623 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 290 பேரும், செங்கல்பட்டில் 257 பேரும், சேலத்தில் 191 பேரும், திருவள்ளூரில் 162 பேரும், காஞ்சிபுரத்தில் 135 பேரும், நாமக்கல், திருப்பூரில் தலா 123 பேரும், ஈரோடில் 112 பேரும், தஞ்சாவூரில் 93 பேரும், மதுரையில் 92 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Nagarajan Jayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    பண்டிகை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement