dinamalar telegram
Advertisement

மதுரைக்கான முல்லைப்பெரியாறு குடிநீர் திட்ட பணிக்கு டெண்டர்

Share
Tamil News
மதுரை : மதுரை மாநகராட்சி செயல்படுத்தும் முல்லைப்பெரியாறு குடிநீர் திட்ட 3ம் பகுதி பணிக்கு டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 28 வார்டுகளில் ரூ.250 கோடியில் 855 கி.மீ., நீளத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

மாநகராட்சியின் மொத்த நீராதாரம் 175 எம்.எல்.டி., (ஒரு எம்.எல்.டி., என்பது நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் என்று அர்த்தம்) ஆகும். கோடைக்காலங்களில் 100 முதல் 120 எம்.எல்.டி.,யாக சரிந்துவிடும். மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினசரி 225 எம்.எல்.டி., வேண்டும். இதை பெற முல்லைப்பெரியாறில் இருந்து குடிநீர் கொண்டுவரும் ரூ.1295 கோடி திட்டத்தை மாநகராட்சி துவங்கியது.

முல்லைப்பெரியாறு-சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வருவது, சுத்திகரிப்பு செய்து நகருக்கு கொண்டு வருவது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகிப்பது என 3 பகுதிகளாக இப்பணி நடக்க உள்ளது. முதல் இரு பகுதி பணிகளுக்கும் ஏற்கனவே நிர்வாக, தொழில்நுட்ப அனுமதி கிடைத்துவிட்டது. இதில் 2வது பகுதி பணி துவங்கி நடக்கிறது. முதற்பகுதி பணி விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் 3வது பகுதிக்கும் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இப்பணிக்கு டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்க டிச.,3 கடைசி நாளாகும்.

பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், '3வது பகுதி பணி மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த 28 வார்டுகளுக்கானது. இங்கு அனைத்து பகுதிகளிலும் பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. குழாய்களின் மொத்த நீளம் 855 கி.மீ., ஆகும். இப்பணி நிறைவு பெற்றப்பின் புதிதாக இணைந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement