dinamalar telegram
Advertisement

பீகார் முதல்கட்ட தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள்

Share
பாட்னா: மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆர்ஜேடி வேட்பாளர் 68 கோடி ரூபாய் சொத்து மதிப்பை காட்டி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் வரும் 28 ம் தேதி துவங்கி மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்புகுறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்னும் அமைப்பு ஆய்வு நடத்தியது.


முதல்கட்ட தேர்தலில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சி சார்பில்41 பேரில் 39, ஐக்கிய ஜனதா கட்சியில் 35 பேரில் 31, பா.ஜ.,வில் 29 பேரில் 24, எல்.ஜே.பி.,யில் 41 பேரில் 30 பேர், பகுஜன் சாமாஜ் கட்சியில் 26 பேரில் 12 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும் பாலானோர் சுமார் ரூ.1கோடி அளவிற்கு சொத்து மதிப்பு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மொகாமா தொகுதி வேட்பாளரான லாலுகட்சியான ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த அனந்தகுமார் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.68 கோடி என காண்பித்துள்ளார். முதற்கட்ட வேட்பாளர்களிலேயே இவர் தான் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.

இவருக்கு அடுத்த படியாக ஷேகுபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கஜானந்த் ஷாகி என்பவர் ரூ.61 கோடிசொத்து மதிப்பை காண்பித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கயா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில்போட்டியிடும் வேட்பாளர் மனோர்மா தேவி ரூ.50 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாது 5 வேட்பாளர்கள் தங்களின்சொத்து பூஜ்யம் நிலையில் அதாவது சொத்துக்களே இல்லை என தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    பா.ஜ வில் 29 க்கு 24 கோடீசுவரர்கள். எங்கேயோ இடிக்குதே... இவிங்கள்ளாம் ஏழைப் பங்காளர்கள், சௌக்கிதார்கள்னு தானே கேள்விப் பட்டிருக்கிறேன்.

Advertisement