dinamalar telegram
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு : 4 வார அவகாசம் தேவை: கவர்னர்

Share
சென்னை: மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க3 முதல்4 வார கால அவகாசம் ஆகும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளது.
மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கவர்னர் மாளிகைக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இது குறித்து பதில் அளித்துள்ள கவர்னர் பன்வாரி லால் புரோகித் கடித்ததில் தெரிவித்து இருப்பதாவது: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதா தொடர்பாக முடிவெடுக்க அவகாசம் தேவை. ஐந்து அமைச்சர்களுடனான சந்திப்பின்போதும் இதே தகவல் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

3 முதல் 4 வாரங்கள் தேவை




மருத்து படிப்பில் உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.24-ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்



முன்னதாக உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவு அறிவிக்க கோரி வரும் அக்.24ம் தேதி தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • Subramanian Sundararaman - Chennai,இந்தியா

    EWS category மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செய்ய மறுக்கும் அரசு சமூக நீதியை பற்றி பேசுவது விந்தையாக உள்ளது . ஏழை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் சாத்தியம் . EWS இட ஒதுக்கீடு அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார் .

  • ஆரூர் ரங் -

    சூரியா தன்னோட அறக்கட்டளை வழியா பல ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கிறாராம்.அவர்களுக்கு இந்த😪 ஏழரையால் என்ன பயன் ?

  • Rajan - Chennai,இந்தியா

    நீட் வேண்டாம், அப்புறம் என்ன mayirukku ஒதுக்கீடு வேணும், நீங்க ரெண்டு ஆளும் கட்டூஸ் கூட நரகத்திலே கொதிக்கிற எண்ணைல 😂😂😂

  • அறவோன் - Chennai,இந்தியா

    அண்ணாதுரை அவர்கள் ஆட்டை பற்றி கூறிய உவமை மிகச்சரியே

  • Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    RTE act 2009, பிரகாரம் ஆண்டுக்கு ரெண்டு லட்சம் வருமானம் வாங்கும் ஏழை குடுமப குழந்தைகளுக்கு 25% தனியார் பள்ளியில் ஒதிக்கீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறது? இது வரை அது நடைமுறை படுத்த பட்டதா என்று தெரியவில்லை, நடைமுறை படுத்தி இருந்து இருந்தால் அவர்களுக்கும் இந்த புதிய உள் ஒதுக்கீட்டில் வாய்ப்பு கொடுக்க வேண்டுமே ?? அது என்ன அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மட்டும் ??? இப்பொழுது பல செய்திகள வந்துள்ளன அதாவது அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகி இருக்கு தனியார் பள்ளியில் படித்து கொண்டு இருந்தவர்கள் அரசு பள்ளிக்கு மாறுகிறார்கள் என்று? சோ அரசு பள்ளியில் சேர்பவர்கள் எல்லாம் ஏழை மாணவர்கள் கிடையாது, வருமானம் சான்றிதழ் வாங்கி சேர்கிறார்களா ??? வருமானம் குறைவாக உள்ளவர்கள் என்று சான்றிதழ் வாங்குவது தமிழநாட்டில் சுலபம் ???? இதை எல்லாம் சீர் செய்து உண்மையான ஏழை பயனாளிகளுக்கு சென்று அடைந்தால் மகிழ்ச்சி ?????? அல்லது இது ஒரு மிக பெரிய ஏமாற்று திட்டமே ????

Advertisement