dinamalar telegram
Advertisement

பீரங்கியை அழிக்கும் நாக் ஏவுகணை; இறுதி சோதனை வெற்றி!

Share
பொக்ரான்: மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய நாக் ஏவுகணையின் இறுதி சோதனையை பொக்ரானில் வெற்றிகரமாக முடித்தது.

சீனாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், இந்தியா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அக்., 19-ல் ஹெலிகாப்டிரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பீரங்கிகளை அழிக்கும் சான்ட் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் நாக் எனும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையின் கடைசி சோதனையை நடத்தியது. அது வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ., அறிவித்துள்ளது.

சீனாவுடனான லடாக் மோதலுக்கு பிறகு அவசர தேவை கருதி 200 ஸ்பைக் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இஸ்ரேலிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது உள்நாட்டு ஏவுகணை தயாராகிவிட்டதால் இறக்குமதிக்கான தேவையில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிழக்கு லடாக் போன்ற பகுதிகளில் களமிறக்குவதற்கு நாக் ஏவுகணை தயாராக உள்ளது. வெற்றிகரமாக 10 முறை இந்த ஏவுகணை ஆயுதத்தை கண்டுபிடித்து தாக்கி அழித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • Anand - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்....

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    இதை நட்பு நாடுகளுக்கு விற்பனைக்கும் கொடுக்க வேண்டும்

    • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

      அஜெண்டா தயாரா இருக்குங்க .......கண்டிப்பாக விற்பனை செய்வோம்......

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    இந்த ஏவுகணைகளை இந்தியா தயாரித்து ஏற்றுமதி செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக உயரும்.

  • Uma Kumar - Madurai ,யூ.எஸ்.ஏ

    Jai Hind, Jai Modiji

  • Priyan - Madurai,இந்தியா

    அருமை. பாரத் மாதாகி ஜெய்

Advertisement