dinamalar telegram
Advertisement

வடகிழக்கு பருவமழை, மீட்பு பணியில் தன்னார்வலர்கள் தயார்!

Share
Tamil News
மதுரை: மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மீட்பு பணிகளின்போது தீயணைப்பு வீரர்களுக்கு உதவ 70 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிப்படை பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர்.


@@மதுரையில் நேற்று தென்மாவட்ட தீயணைப்பு அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் அரவிந்த் மீரா யுனிவர்செல் பள்ளியில் நடந்தது. காணொலி மூலம் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்றார். தென்மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், மாவட்ட அலுவலர் கல்யாண்குமார், கூடுதல் அலுவலர் சுப்பிரமணியன், நகர் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சைலேந்திரபாபு பேசுகையில், ''தென் மாவட்டங்களுக்கென தேர்வு செய்யப்பட்ட 480 தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அழைத்தவுடனே வர தயார் நிலையில் அவர்கள் இருக்க வேண்டும்'' என்றார்.

மதுரை மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நகர், அனுப்பானடி, தல்லாகுளம், மீனாட்சி அம்மன் கோயில், உயர்நீதிமன்ற நிலையங்களுக்கு மொத்தம் 70 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீயணைப்பது உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் அதில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement