dinamalar telegram
Advertisement

பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே ராஜினாமா; தேசியவாத காங்.,கில் இணைகிறார்

Share
மும்பை: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 'இந்த முடிவுக்கு, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான் காரணம்' என, அவர் குற்றம் சாட்டினார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா -- காங்., -- தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில பா.ஜ.,வில், கடந்த, 35 ஆண்டுகளாக, பல்வேறு பதவிகள் வகித்து வந்தவர், ஏக்நாத் கட்சே. கடந்த, பா.ஜ., ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்து வந்த ஏக்நாத் மீது, 2016ல், ஊழல் புகார் எழுந்தது.
இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, பட்னவிஸ் மீது, ஏக்நாத் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், பா.ஜ., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, ஏக்நாத் கட்சே நேற்று(அக்.,21) ராஜினாமா செய்தார்.

கட்சி தலைமை மீது, தனக்கு வருத்தம் எதுவும் இல்லை என்றும், இந்த முடிவுக்கு, தேவேந்திர பட்னவிஸ் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, தேசியவாத காங்.,கில், ஏக்நாத் கட்சே, நாளை இணைய இருப்பதாக, அக்கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், நேற்று அறிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    ஐயோ பாவம் பிஜேபி க்கு நிறைய பேரு சேருகிறார்கள் தமிழ் நாட்டில் வடக்கே பிரிகிறார்கள் சம்திங் வ்ரோங்

  • Raj - nellai,பஹ்ரைன்

    இது ஆரம்பம் தான் ....

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    சரியான தனக்கு வசதியான கட்சியில் தான் ஐக்கியம் ஆகியுள்ளார். பாம்பறியும் பாம்பின் கால் போலெ சரியான கட்சியில்தான் சேர்ந்துள்ளார். விளங்கிடும்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    ஆக இந்திய அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் தங்களின் பதவி எங்கு சரியாக இருக்குமோ அங்கே கூவுவார்கள்.. கொள்கைகளோ கோட்ப்பாடுகளோ அல்லது மக்கள் நலன்களோ கருதுவதே இல்லை என்பது வெளிப்படை ...

  • sankaseshan - mumbai,இந்தியா

    இவர் BJP இல் மந்திரியாக இருந்தபோது ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்தவர் பட்னவீ சால் ஓரம் கட்டுப்பட்டவர் பவரின் ஊழல் கட்சிக்கு போயிருக்கிறார் பாதகம் இல்லை .

    மேலும் செய்திகள் :

Advertisement