dinamalar telegram
Advertisement

மாணவர் சேர்க்கையில் மத மாற்ற முயற்சி: பெற்றோர் முற்றுகை; ஆசிரியைகள் ஓட்டம்

Share
மொடக்குறிச்சி: அரசுப்பள்ளியில், மாணவர் சேர்க்கையின்போது, மத பிரசாரத்தில் ஆசிரியைகள் ஈடுபட்டுள்ளனர். பெற்றோர் முற்றுகையால், அவர்கள் ஓட்டம் பிடித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், ஆனந்தம்பாளையம் பஞ்.,ல், செல்லத்தாப்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவியரை, கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முயற்சி செய்ததாக, துணை தலைமையாசிரியை, ஆசிரியை மீது, நடவடிக்கை கோரி, மொடக்குறிச்சி வட்டார கல்வி அதிகாரி ஜெகநாதனிடம், ஹிந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று புகார் அளித்தனர்.

நிர்வாகிகள் கேசவன், முருகன் மனுவில் கூறியிருப்பதாவது: செல்லாத்தாபாளையத்தில் ஊ.ஒ.தொ., பள்ளியில், தற்போது சேர்க்கை நடக்கிறது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று பள்ளிக்கு வந்தனர். துணை தலைமை ஆசிரியை அருள்மணி, ஆசிரியை சரண்யா ஆகியோர், கிறிஸ்தவ மத புத்தகங்கள், சி.டி.க்கள், உருவ பொம்மைகளை வைத்து, மாணவர்களை மதம் மாற்ற, போதனை நடத்தியுள்ளனர். இதையறிந்த பெற்றோர், ஹிந்து முன்னணியினர் பள்ளியை முற்றுகையிட முற்பட்டபோது, அவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். வகுப்பறைக்குள் சென்று பார்த்தபோது, கிறிஸ்து படத்துடன் கூடிய ஸ்டிக்கர், மத புத்தகங்கள், ஜெபக்கூடம் நடத்தியதற்கான ஆதாரம் இருப்பதை பார்த்து அதிர்ந்தோம். ஈரோடு மாவட்டத்தில், சமீபமாக பல்வேறு பள்ளிகளில், மதமாற்ற நிகழ்ச்சி நடப்பது அதிகரித்துள்ளது. ஆசிரியர்களே இதில் ஈடுபடுவது, வேதனை அளிக்கிறது. இதில் ஈடுபட்ட ஆசிரியைகள் அருள்மணி, சரண்யா மீது, கல்வி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement