LOGIN
dinamalar telegram
Advertisement

"நீங்க பூனை என சொல்வது பெங்களூரு சிறையில் உள்ளவரையா..."

Share
அ.தி.மு.க.,விற்கு இரட்டை தலைமை ஒத்துவராது. ஒரு வளைக்குள் இரு எலிகள் இருக்க முடியாது என்பதை, அ.தி.மு.க., செயற்குழு காட்டுகிறது. இரண்டு எலிகளும், பஞ்சாயத்து என வந்தால், பூனையிடம் தான் செல்லும். அந்த பூனை தன் பங்கை, கவ்வாமல் விடாது - மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன்.

'நீங்க, பூனை என சொல்வது, பெங்களூரு சிறையில் உள்ளவரையா...' என, அப்பாவித்தனமாக கேட்கத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை.தமிழக அரசு, சமத்துவபுரம் உருவாக்கியது போல், ஒவ்வொரு தாலுகாவிலும், சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும். தெருக்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, அங்கு வைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை, அந்தந்த கட்சி அல்லது அமைப்பு தலைவர்களிடம் பெற வேண்டும் - இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்.

'நல்ல அறிவுரை, அவசியம் செய்ய வேண்டும்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை.கோயம்பேடு மார்க்கெட்டில், மொத்த காய்கறி சந்தை திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி தான். அதுபோல, அனைத்து மொத்த, சில்லரை காய்கறி; மொத்த, சில்லரை பழம் மற்றும் மலர் வணிகத்தை, மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.

'கொரோனா அதிகரித்து வருகிறதே; அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிக்கை.பார்லிமென்டில் புதிய சட்டத்தை கொண்டு வர, அமைச்சரவையில் விவாதம் நடத்திய பிறகே நிறைவேற்ற வேண்டும். ஆனால், துறையின் இணை அமைச்சராக இருந்தவரே, விவசாய மசோதாக்களை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளார் - தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்.

'எல்லாம் முறைப்படி தான் நடந்தது. எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் தான், முறைப்படி நடக்கவிடவில்லை...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேச்சு.மோடி அரசை அகற்றும் வரை விவசாயிகள் வளம் பெற முடியாது. ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை போல், தமிழகத்தில் பொது மக்கள் விவசாய சட்டதை எதிர்த்து போராட வேண்டும் - தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா.

'தமிழகம் அமைதியாக இருப்பது, உங்களுக்கு பிடிக்கவில்லையா...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா பேச்சு.ரஜினி, தேர்தல் பணியை துவங்கி விட்டார். ரஜினி மக்கள் மன்றம் சிறப்பாக பணியாற்றுகிறது. மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். மக்கள் மத்தியில் ஆன்மிக அரசியல் எழுச்சி உருவாகி விட்டது; ரஜினி தான் வருங்கால முதல்வர் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

'இப்படி, உசுப்பேற்றி உசுப்பேற்றி, ரஜினியை ரணகளம் ஆக்கி விட்டீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  அருண் என்பவர் வினோதமான இடதுசாரி. இடதுசாரிகள் யாரிடம் பணம் கறக்க முடியுமோ, கறந்துவிடுவார்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  புலியை (புளியை )பூனையாகிவிட்டாரு டோய்

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அருணன் பேச்செல்லாம் ஒரு பேச்சு என செய்தியாக போட வேண்டிய அவசியமே இல்லை

 • சுடலை மாடசாமி -

  பெங்களூரில் இருப்பது பெருச்சாளி

 • மதுமிதா -

  கோடி கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு துதி பாடும் கட்சி. இவர் சொன்னதை சொல்லும் recorder

Advertisement