LOGIN
dinamalar telegram
Advertisement

வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்; இந்தியாவுடன் இணைந்த பிரான்ஸ் நிறுவனம்

Share
புதுடில்லி: 'வீனஸ்' எனப்படும் வெள்ளி கோளுக்கு பயணம் மேற்கொள்ளும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ராஸ்காஸ்மோஸ்' மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.என்.ஆர்.எஸ். ஈடுபட உள்ளன.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியுள்ளார். இந்தியா மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஈடுபட பிரான்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. முதல் முறையாக பிரான்சின் விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  நல்லது. கூட்டுறவு தொடரட்டும்.

 • Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  உதயனை காவியம் ஏரோபிளான் டெக்னாலஜி ராமாயணம் ராவணனின் ஏரோபிளான் டெக்னாலஜி இதுபற்றி தற்போது இலங்கை அரசு ஆராய்ச்சி செய்ய சொல்லி இருக்கிறது மஹாபாரதம் - அம்மாவாசை பற்றி நிலவு சூரியன் நேர்கோட்டில் வரும்போது நடக்கும் நிகழ்வுகள் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் நல்விதத்தில் சொந்த பெயரில் உபயோகிப்பதும் ஒரு பண்பானவனின் செயல்

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  உலகின் வழிகாட்டியாக வாழந்த இந்தியாவை மீண்டும் அதே பாதையில் எடுத்து செல்லும் ISRO வின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஒரு காசுகூட செலவு இல்லாமல் அன்றய காலங்களில் நம் முன்னோர்கள் உட்க்கார்ந்து இடத்திலே இருந்தே எங்கு என்ன இருக்கிறது என்று கூறி எழுதியும் வைத்து விட்டார்கள், ஆனால் இன்று இவர்கள் பல லட்சம் கோடி பணம் செலவு செய்து அதை ஆராய்ச்சி செய்வது பாராட்டவைக்கிறது, முன்னோர்கள் பயன்படுத்திய முறையை மூட நம்பிக்கை என்று அவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இனத்தையே அழிக்கவேண்டும் என்று பரம்பரையாக செயல்பட்டு வருகின்றனர், அன்று அவர்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று தெரிந்தும் அவைகளை பொய் என்று கூறி பிழைப்பு நடத்தி வரும் இந்த காலத்தில் அவைகள் அனைத்தும் இருக்கிறது என்று வெளிநாட்டினருடன் கூட்டு சேர்ந்து விஞ்ஞான முறைப்படி நிரூபிப்பதில் மகிழ்ச்சி, வந்தே மாதரம்

  • ஆப்பு - ,

   சரிங்க... வீனஸ் எனப்படும் சுக்கிர கிரகத்தில் என்ன உயிரினங்கள் இருக்குன்னு நம்ம முன்னோர்கள் உக்காந்த இடத்திலேருந்து எழுதி வெச்சாங்க லயன் சேகர் ஐயா?

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

   அந்த காலத்திலேயே வானவெளியில் நடக்கும் அற்புதங்களை துல்லியமாக அறிந்து அதற்க்கு ஏற்ற செயல்களை செய்து வந்துள்ளோம்

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

   ஆப்புகல் எல்லாம் நமது முன்னோர்கள் மிக துல்லியமாக கணித்த பஞ்சாங்கம் போல் கணிக்க முடியுமா இந்த கணனி உலகில்.... சொல்லுதல் யார்க்கும் எளிய அறிய வாம் சொல்லிய வண்ணம் செயல்.... திருக்குறளையாவது ஒழுங்காக படித்திருப்பார் என்பது சந்தேகம் தான் .....

Advertisement