LOGIN
dinamalar telegram
Advertisement

திமுக வாரிசு அரசியல் ஏற்படும் என்று அண்ணாதுரைக்கு தெரியாதா?

Share
'தம்பி வா... தலைமை தாங்க வா...' என்று அண்ணாதுரை அழைத்தார். இதை சரியாகப் புரிந்து கொண்ட, மறைந்த கருணாநிதி, மருமகன்களை, மகன்களை, மகள்களை மற்றும் பேரன்களை, டஜன் கணக்கில், அரசியலில் இறக்கி விட்டுவிட்டார். இது தான், அக்மார்க் அறிவாலய அரசியல் என்கின்றனர் - முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.

'பின்னாளில் தி.மு.க., குடும்ப அரசியலா மாறும்ன்னு அண்ணாதுரைக்குத் தெரியாம போனது தான் துரதிர்ஷ்டம்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அறிக்கை.ஈ.வெ.ரா., சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது, கடுமையான கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் சிலைகளை, இப்படி தொடர்ந்து அவமரியாதை செய்வதை, ஏற்க முடியாது - அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.

'களங்கப்படுத்தி இருக்கலாம். காவியால் களங்கம் வந்தது என்பது தவறு. காவி, களங்கத்திற்கு உரிய நிறம் அல்ல...' என, திருத்தம் செய்யும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.கொரோனா காலத்தில், இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி, உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, சுருங்கிப் போனது. விவசாயத்துறை மட்டுமே, வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளது. அவர்களின் நலன் காப்பது நம் கடமை. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டங்களும், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் - நடிகர் கமல்.

'ரொம்ப லேட்... 'பிக்பாஸ் ஷூட்டிங்' போயிட்டீங்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமல் அறிக்கை.பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில், எந்த குழப்பமும் கிடையாது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் இருக்குமானால், பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, வருவாய்த் துறை மூலம், நடவடிக்கை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்.

'பிறகு, குழப்பத்தின் மறுபெயர் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறைன்னு பேர் எடுத்தது எப்படி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.குஜராத்தின் ஆமதாபாத் நகரில் செயல்பட்டு வந்த, தமிழ் வழி பள்ளியை மூட, அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக கட்சிகள், விபரம் தெரியாமல், கண்டனம் தெரிவித்துள்ளன. அப்பள்ளியில் படித்த தமிழ் மாணவர்கள், ஆங்கில மோகத்தில், ஆங்கில வழி பள்ளியில் சேர்ந்ததால் தான், தமிழ் வழி பள்ளியை மூட வேண்டியதாகி விட்டது. அதற்குள், தமிழக கட்சிகள் அமளி துமளி செய்து விட்டன - தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

'தமிழில் படிக்க, மாணவர்கள் விரும்பாததால் தான் இந்த நிலையா; அதற்குள் தமிழகத்தில் இத்தனை களேபரமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • Rajan - Chennai,இந்தியா

  ஹலோ, அது கட்டுமரத்தின் குடும்ப கம்பெனி, எப்பவுமே தலீவரு குடும்பத்துல இருந்து தான் வருவாங்க, நீ என்னப்பு விவரம் தெரியாம இருக்க

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி அவர்கள் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தவில்லை.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  மறைந்த தலைவர்கள் என்று யாருமேயில்லை டாஸ்மாக்கினாட்டில் எல்லோருமே மறைத்த தலைவர்கள் தான் உண்டு

 • sankaseshan - mumbai,இந்தியா

  மாலிக் ராஜாவின் கற்பனை அபாரம் தேசத்துக்கு தொண்டு செய்ய திருமண பந்தத்தில் இருந்து வெளியேறினார் மோடி அதுக்கும் ஒரு குறை சொல்லு .

 • madhavan rajan - trichy,இந்தியா

  தமிழகத்தில் ஹிந்தி படிக்கும் ஆர்வத்தில் பல மக்கள் உள்ளனர். இங்கு அரசு நடத்தமாட்டேன் என்று அடம் படிக்கிறது. எல்லா மாநிலங்களிலும் தமிக்க அரசே ஒரு தமிழ்ப்பள்ளியை நடத்தலாமே. ஏன் செய்யக்கூடாது?

  • Madhu Kumaran - vellore,இந்தியா

   எஸ்

  • Madhu Kumaran - vellore,இந்தியா

   good

  • Madhu Kumaran - vellore,இந்தியா

   ok

Advertisement