LOGIN
dinamalar telegram
Advertisement

திருப்பூரில் 20 நாள்... 27 ஆயிரம் பேர்! ரயில்களில் பயணிப்போர் மெல்ல அதிகரிப்பு

Share
Tamil News
திருப்பூர்:ரயில்களில், திருப்பூருக்கு வருவோரும், திருப்பூரில் இருந்து பிற இடங்களுக்குப் பயணிப்போரும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றனர்.கடந்த 7ம் தேதி முதல் கோவையில் இருந்து இன்டர்சிட்டி, கோவை, சேரன், நீலகிரி என சென்னைக்கு நான்கு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறைக்கு (ஜனசதாப்தி) ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்கள், திருப்பூரில் நின்று செல்கின்றன. ரயில் இயக்கம் துவங்கிய முதல் வாரத்தில் பயணிகள் எண்ணிக்கை சொற்பமாக இருந்தது. நுாறு முதல், 150 பேர் வருவதே அரிதாக இருந்தது.மெல்ல அதிகரிக்க துவங்கிய கூட்டம் வார நாட்களில், 300 ஆக உயர்ந்தது. கடந்த இருபது நாட்களில், ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில், 27 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இங்கிருந்து வெளியூர் சென்றவர்களை விட, திருப்பூர் வந்திறங்கியவர்களே அதிகம்.
சேலம், காட்பாடி, அரக்கோணம், சென்னையை விட, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறைக்கே கூட்டம் அதிகமாக உள்ளது. பணிக்கு செல்வோர், ஈரோடு - கோவை இடையே, முன்பதிவு டிக்கெட் பெற்று பயணிக்கின்றனர்.
காத்திருப்பு இல்லை
சென்னைக்கு இரவு ரயிலில் பயணிக்க வேண்டுமெனில் முன்பதிவு டிக்கெட் கிடைக்க, 120 நாட்களுக்கு முன் புக்கிங் செய்ய வேண்டும். இல்லையேல், காத்திருப்பு பட்டியல் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்காக காத்திருக்க வேண்டும் என்ற நிலை, அனைத்து ரயில்களும் இயங்கும் போது இருந்தது. தற்போது, நான்கு ரயில்கள் மட்டும் சென்னைக்கு இயங்கிய போதும், 'புக்கிங்' குறைவாகவே உள்ளது.
காலை 8:00 மணிக்கு முன்பதிவு கவுன்டர் திறக்கப்படுகிறது. வழக்கமாக நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பர். தற்போது, நிலைமை தலைகீழாக உள்ளது. கவுன்டர் திறந்து ஒரு மணி நேரம் கழித்து ஓரிருவர் மட்டும், சவுகரியமாக வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் அதுவும் இல்லை. டிக்கெட் எளிதாக கிடைப்பதால், காத்திருப்போர் பட்டியலுக்கு வேலை இல்லாமல் போயுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    என்ன தான் கொரோனா அச்சுறுத்தினாலும், அரசு முடக்கினாலும் பொழப்புக்கு வெளியே போக வேண்டிய கட்டாயம். இவிங்க என்ன வீடியோ கான்ஃபரன்ஸ் போட்டா சம்பாரிக்க முடியும்?

Advertisement